நம் உடலில் நாளுக்கு நாள் நச்சுத்தன்மை சேர்ந்து வருகிறது .இந்த நச்சுத்தன்மையை அடிக்கடி விரதம் இருந்தோ அல்லது சிலவகை உணவுகள் மூலமாகவோ வெளியேற்றி விட வேண்டும். இல்லையென்றால் உடலில் சேரும் கழிவுகளால் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
கழிவுகள்
நாம் கட்டிய வீடு நாளுக்கு நாள் பழையதாகி விட்டால், சுவர்களிலும் தரை மற்றும் வீடு முழுவதும் நிறைய அழுக்குகள் சேரத் தொடங்கும். அதே போல் நம் உடலிலும் நாளாக நாளாக கழிவுகள் சேர தொடங்கும். இதை வீட்டிலிருந்து அழுக்கை வெளியேற்றினால் எப்படி வீடு புதியதாக மாறுகிறதோ அதே போல் நம் உடலிலிருந்தும் கழிவு வெளியேறினால் உடலும் குடலும் புதியதாக மாறும்
உடலுக்கு முழு ஓய்வு
நாம் தினமும் ஜிம்முக்கு சென்று வந்தாலும், வாரத்தில் ஒரு நாள் உடலுக்கு முழு ஓய்வு கொடுப்பது போல், கல்லீரலுக்கும், குடலுக்கும் ஓய்வு தேவை. தினமும் உணவு உண்ணும் நிலையில், இவை அனைத்தும் ஓயாமல் வேலை செய்கின்றன. நாம் விரதம் இருக்கவில்லை என்றால் நமது உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்காது இதனால் வயிற்றில் தேங்கிய அழுக்குகள் வெளியேறாது மற்றும் எடை அதிகரிக்கும். அதனால் விரதம் இருந்து கழிவுகளை வெளியேற்றுவோம்.
மேலும் பருவ கால பழம் மற்றும் தேங்காய் சாப்பிட்டு நச்சுபொருட்களை வெளியேற்றுவோம். வாரம் ஒருமுறை உண்ணாமல் இருப்பதால், நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.
மேலும் படிக்க
தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
நல்ல ஆரோக்கியத்திற்கு தினம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
Share your comments