சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயமாகும். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்பது பலர் அறியாத விஷயமாகும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சரும அழுக்குகளை நீக்கும் : இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளையும், இவை நீக்குகின்றன.
2. சரும நிறத்தை தெளிவாக்கும் : இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை சேமித்து வைத்து அதை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி தினமும் முகத்தில் ஸ்பிரே அடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
3. பொடுகுத் தொல்லையைப் போக்கும் : வெந்தயம் நச்சு நீக்கி மட்டுமல்ல பூஞ்சைகளை அழிக்கும் வல்லமையும் கொண்டதாகும். எனவே ஊறவைத்த வெந்தயத்தை அறைத்து அதோடு தயிர் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லையை தவிர்த்திடலாம்.
4. வெள்ளை முடி வளர்ச்சியைத் தடுக்கும் : வெந்தயத்திலுள்ள பொட்டாசியம், 20 வயதிலேயே முளைக்கும் வெள்ளை முடி வளர்ச்சியைத் தடுக்க உதவும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதோடு பெரிய நெல்லிக்காய் சாறை சேர்த்து தலைமுடி வேர்களில் தடவி தலைக்குக் குளிக்கவும். வெள்ளை முடியைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடதக்கது.
5. பளிச் முகம் வேண்டுமா? : வெந்தயத்தில் வைட்டமின் C இருப்பதால் அது முகத்தை பளிச்சென மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊற வைத்து அரைத்த வெந்தயத்தில் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளபளக்க செய்யும்.
6. முகச் சுருக்கங்களை நீக்கும் : வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் தேய்ப்பதால் முகச் சருமம் இறுகி சுருக்கங்கள் நீங்கும். இழந்த இளமையை மீட்க, இது உதவும்.
7. முகப்பருக்கள் நீங்கும் : இது நச்சுக் கிருமிகளை நீக்கவும் உதவும். வெந்தயத்தை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஆறியதும் வெந்தயத்தை நீக்கிவிட்டு தண்ணீரை தினமும் பருக்கள் உள்ள இடங்களில் தடவி வர நல்ல பலன் பெறலாம்.
மேலும் படிக்க:
SBI வங்கி: உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு! தவறவிடாதீர்கள்
EPFO குட் நியூஸ்: இனி இந்த முக்கிய வசதியால், உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம்
Share your comments