எந்தெந்த உணவுகளை தவிர்த்தால் மைக்ரேன் தலைவலி வராது என்று ஆராய்ச்சி செய்வதை விடவும், எந்த உணவை அதிகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி அடிக்கடி வருவதையும், வந்தால் அதன் தீவிரம் குறைவாகவும் இருக்கும் என்பதில் தான் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆர்வம் அதிகம்.
மீன் (Fish)
காய்கறிகளை விடவும், மீன் எண்ணெய் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது தலைவலியை குறைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. தலைவலி வரும் போது, அதன் தீவிரம் 30 - 40 சதவீதம் குறைகிறது. ஒரு மாதத்தில், மீன் எண்ணெய் அதிகம் உள்ள 'ஒமேகா - 3, ஒமேகா - 5' மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், ஒரு மாதத்திற்கு வழக்கமாக 10 முறை மைக்ரேன் தலைவலி வருவது பாதியாகக் குறைந்து விட்டது.
இந்த ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்ட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் மற்ற உணவுகளை குறைத்து விட்டு, மீன் மட்டுமே அதிக அளவில் சாப்பிட்டனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டவர்கள், இதனால் பலன் அடைந்தனர்.
எந்த உணவு தலைவலியை அதிகப்படுத்துகிறது என்பது நபருக்கு நபர் மாறுபடும். அதே நேரம் மைக்ரேன் உள்ள அனைவருக்கும் மீன் நல்ல நிவாரணமாக அமைந்துள்ளது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்,
வடக்கு கரோலினா பல்கலைக்கழகம்,
அமெரிக்கா.
மேலும் படிக்க
ஒரு பொருளை வாங்கிய பிறகு, ஏன் வாங்கினோம் என புலம்புபவரா நீங்கள்?
உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
Share your comments