நம் உடல் நலனைப் பாதுகாப்பதில் கீரைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. கீரைகள், பல்வேறு நோய்களை வர விடாமலும், பல நோய்களை தீர்த்தும் வைக்கிறது. பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நரம்புத் தளர்ச்சிக்கு, பொன்னாங்கண்ணி கீரை மிகச் சிறந்த மருந்தாகும். இந்தக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமடையும். இது தவிர, நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும் பல வழிகளை இங்கு காண்போம்.
நரம்புத்தளர்ச்சிக்கு தீர்வு (solution for Nervous breakdown)
- நெல்லிக்கனிகளை தினமும் சாப்பிடும்போது நரம்புத் தளர்ச்சி குணமடைந்து விடும்.
- 2 அல்லது 3 வெற்றிலைகளை வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் செரிமானப் பிரச்சனைகள் தீர்ந்து, நன்கு பசியெடுக்கும். மேலும் உடல் நரம்புகளையும் வலுப்படுத்தும்.
- உடலை வலுப்படுத்தும் சக்தி முருங்கைக்கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன், முருங்கைப்பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நரம்புகள் வலுவடையும்.
- பேரிச்சை பழத்துடன், பால் கலந்து குடித்தால் தேறாத உடல் கூட வலுப்பெறும். மேலும் நரம்புகளும், எலும்புகளும் வலுவடையும்.
- மஞ்சளில் உள்ள ஆன்டிசெப்டிக் எனும் ஊட்டச்சத்து, உடலுக்கு வலிமையை அளிக்கிறது. நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கவும் மஞ்சள் உதவுகிறது.
- தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். வெந்தயம் ஊறவைத்த தண்ணீரைக் குடித்தால், நரம்புத் தளர்ச்சி குறைவதோடு, உடல் சூடும் தணியும்.
- வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் வதக்கி சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமடைந்து விடும்.
- தினமும் 5 அத்திப்பழத்தை சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமடையும்.
- மாதுளம் பழச்சாற்றில், தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமடையும்.
- சுக்கு, மிளகு மற்றும் திப்பிலியை சம அளவு எடுத்துக் பொடி செய்து, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமடையும்.
- இலவங்கப்பட்டையை தேநீரில் கலந்து குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமடைந்து விடும்.
- தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளையில், சாதிக்காய் பொடியை தண்ணீரில் கலக்கி குடித்து வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
மேலும் படிக்க
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்!
Share your comments