1. வாழ்வும் நலமும்

உடல் நலத்திற்கு என்றுமே சிறந்தது உணவே மருந்து தான்

R. Balakrishnan
R. Balakrishnan
Food is medicine
Food is Medicine

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. இங்கிருந்துதான் நாகரிகமும், உணவு கலாச்சாரமும் உலகம் முழுக்க பரவியது. உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு போன்றவை தமிழர்களின் வாழ்வியல் முறையில் ஒன்றாக கலந்திருந்தது. உணவு சார்ந்த மிகப் பெரிய ஆய்வுகள் தமிழர்களுடைய சங்க கால இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை போன்றவற்றில் நாம் கண் கூடாகப் பார்க்கலாம். 

உணவே மருந்து!

சித்தர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற கோட்பாட்டின்படி வாழ்ந்து வந்தவர்கள். பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் நாம் அருந்தக்கூடிய தண்ணீரின் குணங்கள், எவ்வகை தண்ணீருக்கு என்னென்ன குணங்கள் உள்ளன. நாம் அருந்தக்கூடிய பாலின் (Milk) குணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியில் எத்தனை வகைகள் உள்ளன என ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி கூறி உள்ளது.

பழந்தமிழர்கள் சிறுதானிய உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் மிக பிரதானமாக வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்றவைகளை உண்டு நோய் நொடிகளற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்துள்ளனர். அதேபோல் நம் உணவில் அறுசுவைகளும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் பெரும்பாலும் துவர்ப்பு, கார்ப்பு போன்றவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பு சுவை தசை வளர்ச்சி, உடல் பலத்தை பெருக்குகிறது.

புளிப்பு சுவை கொழுப்பை வளர்க்கும். உப்பு சுவை எலும்புகளுக்கு வலுவைத் தருவதோடு, வியர்வையைப் பெருக்கி நஞ்சினை வெளிப்படுத்தும். கசப்பு சுவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் ஆற்றல் உடையது. காரம் உமிழ்நீரை சுரக்க வைக்கும் ஆற்றலுடையது. மேலும் அது சீரணமாக்கும் ஆற்றலுடையது. துவர்ப்பு சுவை குருதியை உண்டாக்குவதோடு குருதியை சுத்தப்படுத்தும்.

தோலுக்கு பொலிவைக் கொடுக்கும்.  நம் தமிழர் மரபுப்படி அதிகமாக பயன்படுத்தப்பட்ட உணவுகளில் மிக முக்கியமானவை எள்ளு சோறு, கொள்ளு சோறு, கடுகு சோறு போன்றவையே. மேலும் உளுந்தங் களி, கேழ்வரகு களி, கோதுமை களி, வெந்தயக் களி போன்றவையும் இடம்பெற்றன.

வீட்டில் இருந்து பணி புரிவதால் முதுகுத் தண்டு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!

சுக்கு

இஞ்சி பித்தத்தை நீக்கும் மருந்து. இஞ்சியை காயவைத்து பயன்படுத்துவதுதான் சுக்கு. வைத்தியத்துக்கு மட்டும் அல்லாமல் சுக்குவை உணவிலும் மாதத்துக்கு ஒருமுறையாவது பயன்படுத்தலாம். சுக்கு பொடியுடன் மல்லி விதைகளை அரைத்து சுக்கு காபி தயாரிப்பது உண்டு. காரம், மணம் நிறைந்த சுக்கு குளிர்ச்சியான உடலுக்கு சூட்டை தரும்.

வாய்வு தொல்லை உடலில் இருந்தால் அதை எளிதில் போக்கிவிடும் தன்மை சுக்குக்கு உண்டு. வயிற்று பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சுக்கு காய்ச்சல் காலங்களில் கை வைத்தியத்துக்கு என்றில்லாமல் மாதம் ஒரு முறை சுக்கு கஷாயம் அல்லது சுக்கு குழம்பு சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் வயிறு பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

மிளகு

சளி, இருமல், காய்ச்சலின் போதுதான் சூப், ரசம் போன்ற மிளகு சேர்த்த உணவுகளை நாடுகிறோம். ஆனால் மிளகு நெஞ்சுச்சளி, நுரையீரல், ஜீரண மண்டலம் போன்றவற்றின் பணியை சீராக்கும் தன்மை கொண்டவை. காரத்தன்மை கொண்ட மிளகை அன்றாட உணவில் பயன்படுத்தினாலே காய்ச்சல் அடிக்கடி வராது. மிளகு உஷ்ணம் தரக்கூடிய பொருளும் அல்ல அதனால் சமைக்கும் போது வரமிளகாய், பச்சை மிளகாய்க்கு மாற்றாக மிளகு சேர்த்து சமைக்கலாம். மிளகு வைத்தியத்துக்கு மட்டுமல்ல சமையலுக்கும் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

​பெருங்காயம்

செரிமானக்கோளாறு இருக்கும் போது மோரில் ஜீரணத்துக்கு இதைசேர்த்து அருந்துவார்கள். வயிறு உப்புசம் இருக்கும் போது வெந்நீரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால் வாயு வெளியேறும். இதுபோல் பல்வேறு ரகசியங்கள் பொதிந்திருந்ததால் தான் உணவே மருந்து என்று மந்திரம் சொன்னார்கள். அந்த பண்டைய உணவு முறையை மீண்டும் நாம் பின் தொடர்ந்தால் நோயின்றி நூறாண்டு வாழ முடியும்!

மேலும் படிக்க

தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

English Summary: Food is medicine - Always the best for health! Published on: 11 August 2021, 07:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.