எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் (Calcium) மற்றும் வைட்டமின் டி (Vitamin D) நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக மிக அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். அதனால், அந்த உணவுகளை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைத்துக் கொள்வது நல்லது. எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சோடியம் அதிகம் உள்ள உணவுகள் (Sodium Foods)
அதிக அளவில் உப்பு உட்கொள்வதால் உடலில் கால்சியம் அளவு குறைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயத்தை அதிகரிக்கிறது. Osteoporosis என்பது ஒரு நோயாகும். இதில் எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் முறிவு ஏற்படும்.
இனிப்பான உணவுகள் (Sweets)
அதிக இனிப்பு சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் நிலையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைக்காத போது, எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன.
காஃபின் (Coffin)
காஃபின் உட்கொள்வது பெண்களின் எலும்பு அடர்த்தியையும் குறைக்கும். காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனமடையச் செய்கிறது. காபியில் காஃபின் உள்ளதால், அளவுக்கு அதிகமாக காபி அருந்துவது நல்லதல்ல.
சோடா (Soda)
அதிகமாக சோடா குடித்தால், அது உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.
சிக்கன் (Chicken)
சிக்கன் அதிகம் சாப்பிடுவதும் எலும்புகளை சேதப்படுத்தும். விலங்கு புரதங்கள் இரத்தத்தை சிறிது அமிலமாக்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இரத்தத்தில் pH இன் மாற்றத்திற்கு உடல் உடனடியாக எதிர்வினையாற்றும் போது, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி அதனை சமன்படுத்துகிறது. இதனால் உடலில் கால்சியத்தின் அளவு குறையத் தொடங்குகிறது.
மது பானம் (Alcohol)
2015 ஆம் ஆண்டு BMJ ஓபனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மது அருந்துவது எலும்பு அடர்த்தியை குறைக்கும் என்பதால், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மது அருந்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் காராமணி!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா: வீட்டிலேயே தயாரிக்கலாம்!
Share your comments