1. வாழ்வும் நலமும்

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Insulin

நீரிழிவு நோய் என்பது அசாதாரணமான உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. ஆரோக்கியமான நபர்களில், இன்சுலின் என்ற ஹார்மோன் உடலின் செல்களுக்கு குளுக்கோஸை வழங்க உதவுகிறது. அவர்களுக்கு அத்தியாவசிய ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி இருக்காது. உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். அதைத் தடுக்கவும், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை. அந்த வகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்சுலின் (Insulin)

இயற்கையான வகையில் உடலில் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே இவற்றை எடுத்துக் கொள்வதால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் சில உணவுகள்:

வெண்டைக்காய்

வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது. அதோடு கூடுதாலாக, மூளை சுறுசுறுப்பாக இயங்க வெண்டைக்காய் உதவுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்லது. தேநீரில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். இது கிட்டத்தட்ட நமது கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அளவைப் போலவே, இன்சிலின் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகற்காய்

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் மிகச் சிறந்த உணவு. இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டிருப்பதால் கணையத்தைத் தூண்டி, இன்சுலின் சுரக்க வகை செய்கிறது.

வெந்தயம்

வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. வெந்தயத்தில் ட்ரைகோனெல்லின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

மஞ்சள்

மஞ்சளில் அதிக அளவு குர்குமின் உள்ளது. மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க

எதனால் வருகிறது இந்த வாயுப் பிடிப்பு: தீர்வு தான் என்ன?

பட்டனை தட்டுனா தோசை வரும்: இணையத்தில் வைரலாகும் தோசை பிரிண்டர்!

English Summary: Foods that naturally secrete insulin! Published on: 30 August 2022, 09:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.