உருளைக்கிழங்கு காய்கறி வகைகளிலே ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரே காய் உருளைக்கிழங்காகும். இதில் அழகு மேம்படுத்துவதற்கான தன்மையும் உள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய உருளைக்கிழங்கு, ஒளிரும் மற்றும் தெளிவான சருமத்தைப் பெற உதவும். முகத்தில் அகலாத புள்ளிகளை அகற்றுவது முதல் வீங்கிய கண்களைக் குறைப்பது மற்றும் முதுமை அறிகுறிகளை குறைப்பது வரை, உருளைக்கிழங்கு தேவையான அனைத்து அழகு நன்மைகளையும் வழங்குகிறது. எனவே, வீட்டிலேயே உருளைக்கிழங்கைக் கொண்டு எளிமையான ஃபேஸ் பேக்கைத் தயாரித்து பயனடையுங்கள்.
உருளைக்கிழங்கு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 3 தேக்கரண்டி மசித்த உருளைக்கிழங்கு மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். அவற்றை நன்றாக கலக்கவும், பின்னர் கலவையை உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சாதாரண நீரில் கழுவவும். ஃபேஸ் பேக்கில் உள்ள தேன் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக வைத்திருக்க உதவும். அதே நேரம், உருளைக்கிழங்கு சாறு, ஒரு ப்ளீச்சிங் முகவராக செயல்படும், மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கவும். ஒரு தடித்த பேஸ்ட் கிடைத்ததும், அதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விடவும். பிறகு, சாதாரண நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு, இந்த ஃபேஸ் பேக்-கை, ஒவ்வொரு நாளும் பயன்படுத்தவும். இந்த கலவையில் உள்ள இரண்டு பொருட்களும் அஸ்ட்ரிஜென்ட் குணங்களைக் கொண்டுள்ளன, அவை அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றவும், தோல் துளைகளைத் திறக்கவும் உதவுகின்றன. உங்கள் சருமத்திற்கு ஒவ்வாமை இருந்தால் எலுமிச்சை சாற்றை நீர்த்துப்போகச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கைத் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு அல்லது கூழ், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு அல்லது கூழ், மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலக்க வேண்டும். அதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் சாதாரண நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்-கை, ஒரு நாளைக்கு ஒரு முறை தடவினால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும். குறிப்பிடத்தக்க வகையில், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு, இரண்டும் வலுவான ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக திறம்பட போராடி பாக்டீரியாவை விலக்க உதவும். மேலும், அவற்றின் சிறப்பான அமில பண்புகள் உங்கள் துளைகளைத் திறக்கும்.
மேலும் படிக்க:
Share your comments