1. வாழ்வும் நலமும்

தலைமுடிக்கு, நெய்-இல் காணப்படும் அற்புத பலன்கள்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
For hair, the amazing benefits found in ghee!

நெய் நீண்ட காலமாக இந்திய உணவுகளில் பிரதானமாக இருந்து வருகிறது, ஆனால் சமீபத்தில் உலகின் பிற பகுதிகளில் பிரபலமாகிவிட்டது. ஏனென்றால் அது பல நன்மைகள் நிறைந்ததாகும். ஆனால் நெய் முடி பராமரிப்புக்கு மிகவும் பிரபலமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது முடி வளர்ச்சியில் செயல்பாட்டுப் பங்கு வகிக்கும் பழமையான மற்றும் மிகவும் திறமையான வீட்டு வைத்தியம் ஆகும்.

எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது? முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் ஏ மற்றும் முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின் டி இதில் உள்ளது என்பது சிறப்பாகும். அது மட்டுமல்ல, நெய்யில் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, இது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சில அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆதாரமாக இருப்பதால், முடி பிரச்சனைகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நெய் எவ்வாறு உதவுகிறது:

1. நெய் உச்சந்தலைக்கு எவ்வாறு பயனளிக்கிறது

உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகு இருந்தால், உங்கள் பிரச்சனைகளை தீர்க்க நெய்யை நம்புங்கள். ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் பிற நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்(antioxidants) இதில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

2. கண்டிஷனராக செயல்படுகிறது

நெய் உங்கள் தலைமுடிக்கு ஆழமான கண்டிஷனராக செயல்படுகிறது. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு தேக்கரண்டி நெய்யை கலந்து, உங்கள் தலைமுடிக்கு தடவவும். தொடர்ந்து பயன்படுத்தும் போது, ​​அதிக அளவு வைட்டமின் ஈ முடியை மென்மையாக மாற்ற உதவுகிறது, அதே நேரத்தில் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையை சீரமைக்கும். அற்புதமான பலன்களைக் காண, ஒரு இரவு முழுவதும் நெய்யை தடவி வைத்துக்கொள்ளவும்.

3. முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது

முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் அதை கட்டுப்படுத்த சில தீர்வுகள் மட்டுமே உள்ளன. குறிப்பாக ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் நெய் அவற்றில் ஒன்றாகும். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை வெதுவெதுப்பான நெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

4. முடி அமைப்பு மற்றும் பளபளப்பை மேம்படுத்துகிறது

நெய் எண்ணெய் மிக்கது, மேலும் உங்கள் தலைமுடியின் தரத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது. எனவே, உங்கள் வழக்கமான எண்ணெயை மாற்றி நெய்யை உபயோகிக்கலாம். நெய்யை நேரடியாக உச்சந்தலையில் தடவுவது முடி அமைப்பை மேம்படுத்துகிறது, மேலும் கூடுதல் மென்மை மற்றும் பளபளப்புடன் ஊட்டமளிக்கிறது.

5. உங்கள் தலைமுடியை ஹைட்ரேட் செய்து ஊட்டமளிக்கிறது

ஈரப்பதம் இல்லாதது மந்தமான, உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நெய்யில் காணப்படும் ஆரோக்கியமான மற்றும் நிறைந்த கொழுப்பு அமிலங்கள், உச்சந்தலை முதல் முடி வேர்கள் வரை ஊட்டமளித்து, நீரேற்றத்தை அதிகரிக்கச் செய்து, உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது.

6. ஸ்பிளிட் என்ட்-ஐ பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்

உங்கள் உச்சந்தலையில் ஊட்டமளிப்பது முதல் ஸ்பிளிட் என்ட்கள் வரை, முடி பராமரிப்புக்கு வரும்போது நெய் மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின்கள் ஏ, டி, கே2, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை அனைத்தும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே பெண்களே, இந்த மந்திர எண்ணெய்யை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தி, பலனடையுங்கள்.

மேலும் படிக்க:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 5% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க உத்தரவு

தமிழகம்: வானிலை அறிக்கை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

English Summary: For hair, the amazing benefits found in ghee! Published on: 02 March 2022, 10:52 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.