1. வாழ்வும் நலமும்

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - அரசு அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Free smartphone for housewives - Govt notification!

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை இந்த மாநில அரசு அறிமுகம் செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ்3 ஆண்டுகளுக்கு இணையதள வசதியும் செய்து தரப்படுகிறது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை மு ன்னிட்டு, மக்களின் மனதில், இடம்பிடிக்க ஏதுவாக, மாநில அரசு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இலவச ஸ்மார்ட்போன்

இந்நிலையில், அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது. இதற்கான திட்ட செலவு ரூ.12 ஆயிரம் கோடி ஆகும்.

டெண்டர்

இதற்கிடையே, இத்திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பண்டிகை காலம் தொடங்குவதற்குள், முதல்கட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளது.

இரட்டிப்பு மகிழ்ச்சி

அரசின் இந்த அறிவிப்பால், குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இலவச ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், இணையதள இணைப்பும் வழங்கப்படுவதால், மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Free smartphone for housewives - Govt notification! Published on: 20 August 2022, 09:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.