குளிர் காலத்தில் பலருக்கும் பல விதமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறையும் நிலையில், வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக் கூட குளிர்காலத்தில் அடிக்கடி சளி, வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவை ஏற்படும்.
வைரஸ் தொற்றால் உண்டாகும் சளி மற்றும் இருமலுக்கு, உடல் தானாகவே வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவது தான் நிவாரணம். இருமல், தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு ஆகியவை உங்களின் அன்றாட செயல்களை பெரிதும் பாதிக்கும். சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபட இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்.
கிவி (Kiwi)
உடலில் உள்ள நோய் கிருமிகள் மனிதனை தாக்காமல் இருப்பதற்கு ஆன்டிபாடிகளை உருவாக்கி வெள்ளையணுக்களுக்கும் பலத்தைத் தருகிறது.மேலும், வைட்டமின் E மற்றும் மற்ற ஊட்டச்சத்துகள் உங்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
திரவ உணவுகள்
காய்ச்சல் வந்தால் எதுவும் சாப்பிடக்கூடாது, சளி இருந்தால் திரவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது பழங்காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரக்கூடிய ஒரு வழக்கமாகும். அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இறுகியிருக்கும் சளி தளர்ந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளியேறும்.
இஞ்சி (Ginger)
உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குவதில் இருந்து, வைரஸ் தொற்றை எதிர்க்கும் தன்மை வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாக இஞ்சி பயன்பட்டு வருகிறது. இஞ்சி தேநீர் அல்லது இஞ்சியை அப்படியே சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தொண்டை வலி ஆகியவை குணமாகும்.
தயிர் (Curd)
உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான பாக்டீரியா தயிரில் உள்ளது. வைரஸ் தொற்றால் சளி மற்றும் இருமலின் போது தயிர் சாப்பிட்டு வந்தால் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாக உதவும்.
தேன் (Honey)
தேனில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் காம்பவுண்டுகள் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.மேலும், தொண்டை வறட்சி, கரகரப்பு மற்றும் வழிக்கு தேன் நிவராணம் அளிக்கிறது.
மேலும் படிக்க
Share your comments