அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ் அதாவது உலக புகழ் பெற்ற தின்பண்டங்களில் ஒன்றான (French Fries) நறுமணம் கொண்ட வாசனை திரவியம் (Perfume) ஒன்றை உருவாக்கி உள்ளது. இது மிகவும் வித்தியாசமான முயற்சியாகும்.
அமெரிக்காவின் இதாஹோ மாகாணத்தில் உள்ள 'தி இதாஹோ பொட்டேட்டோ கமிஷன்' என்ற நிறுவனம், இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அந்த நிறுவனம், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாஹோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து, இந்த வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறியது.
இந்த வாசனை திரவியத்தின் பெயர் பிரைட்ஸ் (Frites) எனப்படும். அந்த நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இதாஹோவின் ஃப்ரைட்ஸ் அறிமுகப்படுத்துகிறோம்'. இது உருளைக்கிழங்கு சிப்ஸ்-ன் தவிர்க்கமுடியாத வாசனையால் தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான நறுமணமாகும் என தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாஹோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த வாசனை திரவியத்தை தயாரித்துள்ளனர். இது, புதுமையான வாசனைக்கொண்டு தயாரிக்க வேண்டும் என்றே முயற்சியில் வெளிவந்த படைப்பாகும்.
ஃப்ரேன்ச் ஃப்ரைஸ் வரலாறு (History of French fries)
ஃப்ரேன்ச் ஃப்ரைஸ்-க்கென தனி வரலாறு உண்டு, உலக புகழ் பெற்ற, இந்த ஃபிரேன்ச் ஃப்ரைஸ் பிரேன்ஸுனுடையதா என்ற கேள்வியும் உள்ளது. தற்போதைய பெல்ஜியம் நாட்டின் ம்யூஸ் பள்ளத்தாக்குப் பகுதியை ஸ்பானிஷ் நெதர்லாந்து என முன்பு அழைத்து வந்தனர். இந்த ம்யூஸ் பகுதியைதச் சுற்றியிருந்த ஏழை மக்கள், மீன் பிடித்து சாப்பிடுவதே வழக்கமாகும். ஆனால், குளிர்காலத்தில் மீன் பிடிப்பு கஷ்டம் என்பதால், அப்போது உருளைக்கிழங்கை சிறு மீன்கள் அளவிற்கு வெட்டி, அவற்றை உணவாக உட்கொள்ள ஆரம்பித்தனர் என்று 1680-ல் பெல்ஜியம் எழுத்தாளர் ஜோ ஜெரார்ட் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு பெல்ஜியத்தின் பேச்சு மொழி ஃபிரேஞ்சு மொழி என்பதால், அவர்கள் இதை ஃபிரேன்ச் ஃப்ரைஸ் என்று அழைத்தாக ஒரு வரலாறு உண்டும். இதுமட்டுமல்லாது, ஃபிரேன்ச் மன்னர் லூயி பிலிப், ஒருநாள் இரவு உணவுக்குத் தாமதமாக வந்ததால், ஏற்கெனவே பொரித்து ஆறியிருந்த உருளைக்கிழங்கை எடுத்து மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்துப் பரிமாறினாராம், அரண்மனை சமையல்காரர். இந்தச் சுவை மன்னருக்கு மிகவும் பிடித்ததால், அதிலிருந்து ஃப்ரேன்ச் ஃபரைஸ் என்ற புதி. உணவு அறிமுகமானது எனவும் ஒரு வரலாறு உள்ளது.
மேலும் படிக்க:
தாய்மொழி தினம்: தாய்மொழிக் கல்வியின் அவசியம்!
900 தன்னாட்சிக் கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு UGC அனுமதி..
Share your comments