1. வாழ்வும் நலமும்

மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்

R. Balakrishnan
R. Balakrishnan
Vitamin C
Credit : Dinamalar

கொரோனா தொற்றுக்கு நேரடியான சிகிச்சை எதுவும் இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும் தன்மை உள்ள விட்டமின் சி, தொற்றுக்கு எதிராக செயல்படும் விதம் குறித்து, பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, அமெரிக்காவில், ரியோர்டன் உலா டாக்டர்கள், இந்த ஆய்வு சரியானது என்று தெரிவித்து உள்ளனர்.

விட்டமின் சி

கோவை அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த 400 நோயாளிகளுக்கு, தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு, அதிக 'டோஸ்' விட்டமின் சி (Vitamin C) தரப்பட்டது. மனப் பதற்றம், மன அழுத்த பாதிப்பு உள்ள, 162 பேருக்கு அதிக டோஸ் விட்டமின் சி தரப்பட்டது. நரம்பியல் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு, அதிக டோஸ் விட்டமின் சி கொடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

சிலருக்கு, எதிர்ப்பணுக்கள் பெருகி, வைரசை அழிக்க, சைட்டோகைன்ஸ் என்ற திரவத்தை சுரக்கிறது. இது, வைரஸ் மட்டுமல்ல, நம் செல்களையும் அழிக்கிறது. இந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கும் விட்டமின் சி தரப்பட்டது.

பழச்சாறு

விட்டமின் சி அதிக அளவில் கலந்த பழச்சாறு மற்றும் விட்டமின் சி மாத்திரைகள் இவர்களுக்கு தரப்பட்டன. விட்டமின் சி தனியாக எடுத்துக் கொள்ளாத நோயாளிகளை விட, அதிக டோஸ் தரப்பட்ட நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) வெகுவாக அதிகரித்தது, இந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது

இது பற்றிய ஆய்வு கட்டுரை, 'பேசிக் அண்டு அப்பிளைட் மெடிக்கல் ரிசர்ச்' (Basic and Applied medical research) என்ற தேசிய மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது. அதற்காக விட்டமின் சி மட்டுமே, வைரஸ் தொற்றுக்கு தீர்வு என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

அறிகுறிகள் தெரிந்ததும், பரிசோதித்து, உறுதி செய்த பின் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையில் சேர்ந்து, விட்டமின் சி நிறைந்த உணவு, பானங்கள், தேவைப்பட்டால், மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்ல பலன் தருகிறது. 

விட்டமின் சி நிறைந்த மாம்பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை சுலபமாக கிடைக்க கூடியவை. கூடுதலாக விட்டமின் சி செறிவூட்டப்பட்ட பழச்சாறுகள் தயார் நிலையில் கிடைக்கின்றன. கொரோனா தொற்று இல்லாதவர்கள், விட்டமின் சி உடன், பொதுவான கொரோனா விதிகளை (Corona Rules) பின்பற்ற வேண்டும். நோய் பாதித்தவர்கள், தினமும் அதிக டோஸ் விட்டமின் சி நிறைந்த பானங்கள், பழச் சாறுகள், மாத்திரைகள் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்பது உறுதி ஆகி உள்ளது.

ஆய்வு

நான்கு தரப்பினரிடமும் தனித்தனியே செய்யப்பட்ட ஆய்வில், நரம்பு கோளாறு, மன அழுத்தம், பதற்றம் உள்ளவர்களுக்கு, குறிப்பிட்ட பிரச்னை வெகுவாக குறைந்து விட்டது. இதயத்துடிப்பு சீரானதோடு, பிளாஸ்மா உற்பத்தியும் அதிக டோஸ் விட்டமின் சி அடிப்படையாக கொண்டு அதிகமானது.

டாக்டர் மாணிக்கம் மகாலிங்கம்,
தலைவர், சக்தி சுகர்ஸ்,
பொள்ளாச்சி. 98430 63952

மேலும் படிக்க

உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியில் கோவேக்சினை மிஞ்சியது கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு!

English Summary: Fruits having vitamin C can reduce stress Published on: 08 June 2021, 08:09 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.