1. வாழ்வும் நலமும்

ஜொலி ஜொலிக்கும் சருமத்தைப் பெற திராட்சை பழ விதை போதும் - இதோ முழு விவரம்!

Sarita Shekar
Sarita Shekar

நாம் எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என எண்ணம், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும். இதற்காக, அவர்கள் உடற்பயிற்சி, யோகா என அனைத்தையும் கடைபிடிப்பது வழக்கம். இந்நிலையில், நீங்கள் ஜொலி ஜொலிக்கும் சருமத்தைப் பெற நாம் அன்றாடம் பயன்படுத்தும் திராட்சை பழ விதைகள் போதும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், அது உண்மைதான்.

மது தயாரிப்பதன் மூலம் கிடைக்கும் ஒரு துணை தயாரிப்பு, திராட்சை விதை எண்ணெய். ஆனால் இதைப்பற்றி பலருக்கு தெரியாது.  அப்புறப்படுத்தப்பட்ட விதைகளை அழுத்தி எண்ணெய்கள் எடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்  வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றன.  இந்த எண்ணெய் எல்லாம் வகையான சருமங்களுக்கும்   பொருந்தும். திராட்சை விதைகள் எண்ணெய் சருமத்திற்கு நன்மை பயக்கும் மூன்று வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது:

இந்த எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. இது ஒரு கேரியர் எண்ணெயாகப் (பிற எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும்) பயன்படுத்தப்படலாம். இது முகப்பருவினால் ஏற்படும் வடுக்களை மெதுவாக மங்கச் செய்யலாம்.

சருமத்திற்கு நெகிழ்ச்சியை சேர்க்கிறது:

உங்கள் சருமத்தில் திராட்சை விதைகள்  எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள வைட்டமின் E மற்றும் C  இரண்டும் மிகவும் திறமையாக மாறுகிறது. இதனால் சருமம் மிகவும் மென்மையாகவும், அழகாகவும் மாறுகிறது. இது சருமத்தில் ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும்.

வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது:

திராட்சை விதைகள் எண்ணெயில் கொழுப்பு அமிலங்களுடன்,   பாலிபினால்களும்  உள்ளன. அவை முன்கூட்டியே ஏற்படும்  வயதான அறிகுறிகளை  எதிர்த்துப் போராடுவதோடு மட்டுமல்லாமல், சூரியனால் ஏற்படும் நிறமி, முகப்பருக்கள் விட்டுச்செல்லும் வடுக்கள் போன்றவற்றையும் போக்க உதவும். மேலும் துளைகள் மற்றும் தோலில் உள்ள  நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.

English Summary: Grape seed is enough to get glowing skin - here is the full details! Published on: 19 April 2021, 03:15 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.