கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் சித்த மருத்துவ கூற்றின் படி இந்தக் கீரையினை தொடர்ந்து உட்கொண்டால் மேனியானது பொன் போல ஜொலிக்கச் செய்யும். ஏழைகளின் தங்க பஸ்பம் என்று அழைக்கப் படுகிறது.
பொன்னாங்கண்ணிக் கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. இந்தக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளன. நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இதில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அதாவது சிவப்பு நிறத்தில் பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணமும் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் உடலுக்கு நன்மை பயக்கும்.
நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளில் படர்ந்து காணப்படும். சிறு செடி வகையைச் சார்ந்த இந்தக் கீரையை பெரும்பாலோனார் பயன்படுத்துவது இல்லை. இந்தக் கீரையை சிலர் கலவைக்கீரைகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவார்கள். இதை அவரவர்களின் கூட்டுபோலவோ, பொரியலாக சமைத்து சாப்பிடுவார்கள்.
பொன்னாங்கண்ணி பெரும்பாலான உடற் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் இதை உண்டு வந்தால் நன்கு துக்கம் வரும். மத்திய நரம்பு மண்டலத்தை சீர்செய்து அனைத்து விதமான நரம்பு பிரச்சனைகளையும் குணமாகிறது. ஞாபக சக்தியை தூண்டக் கூடியது, எனவே படிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஈரலை பலப்படுத்த கூடியது, மஞ்சள் காமாலைக்கு ஏற்ற மருந்து.
மருத்துவ பயன்கள்
தலை முடி பிரச்சனையா?
பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவு வாருங்கள், தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.
பார்வையை குறைபாடா
பொன்னாங்கண்ணியை கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு கண் பார்வை மிக துல்லியமாக தெரியம் என்கிறது சித்த மருத்துவம் உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.
கண்களில் தோன்றும் நோய்களுக்கு சித்த மருத்துவம் பொன்னாங்கண்ணி கீரையையே பரிந்துரைக்கின்றனர். நன்கு அரைத்து அதை நீர் நிரப்பிய மண் பானை மீது வைத்திருந்து மறுநாள் காலையில் எடுத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருந்தால் கண் நோய்கள் குணமாகும்.
பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு பசுவின் பால், கரிசலாங்கண்ணிச் சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து தலை முழுகி வர 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்.
உடல் சூடா
அனைத்து விதமான உடல் வலி, உடல் சூடு, உடல் வலி, உடல் எரிச்சல், போன்றவற்றிற்கு சித்தர்கள் அருளிய மாமருந்து. பொன்னாங்கண்ணி இலைச்சாறு நல்லெண்ணெய் தலா ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒரு முறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
உடல் எடை அதிகரிக்க/ குறைக்க
பொன்னாங்கண்ணி, இந்த ஒரே கீரை போதும் உங்கள் உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் முடியும். ஆமாம் நம்புங்கள் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
மலட்டு தன்மையா
இன்று பெரும்பாலானோர் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கொனேரியா எனும் பால்வினை நோய் குணமாகும். மேலும் ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாக செயல் படுகிறது.
சிறுநீர் எரிச்சல்
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கசாயமாகவோ, உணவாகவோ பயன்படுத்தி வர நல்ல மாற்றம் தெரியும். அதிகரித்த யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
சர்க்கரை நோயாளியா
சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஓரு சத்து நிறைந்த உணவாகும். அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.
மேலும் படிக்க...
சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!
Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!
Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!
உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!
Share your comments