Krishi Jagran Tamil
Menu Close Menu

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Saturday, 05 January 2019 04:25 PM
Shrimp

உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது.  இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

Shrimp benefits

இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும் அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக (Antioxidant) விளங்குகிறது. சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கும்.

Shrimp 1

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால் எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த உடலிலும் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால் எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

K.Sakthipriya
Krishi Jagran 

Health benefits of Shrimp
English Summary: Health benefits of Shrimp

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. கொட்டித் தீர்த்த கனமழையால் தக்காளிச் செடிகள் அழுகின- விவசாயிகள் பாதிப்பு
  2. தூத்துக்குடியில் 725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் - ஆட்சியர் தகவல்!
  3. மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு
  4. கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி - முதல்வர் தொடங்கி வைத்தார்!
  5. Colostrum : பசுங்கன்றுகளுக்கு சீம்பாலின் அவசியம்!
  6. மழைக்கால பாத பராமரிப்பு - நோய்களில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்
  7. எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்
  8. மக்கள் தொகையில், 2027ம் ஆண்டு உலகளவில் இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா. கணிப்பு
  9. கொரோனா தொற்று மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
  10. கரும்பு சாகுபடியில் இனிப்பான லாபம் பெறுவதற்கான வழிமுறைகள்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.