Corona Milk
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், மதுரை விராட்டிபத்துவை சேர்ந்த சாலமன்ராஜ், 34, தன் டீக்கடையில் கடந்த ஆறு மாதங்களாக 'சுடச்சுட' கொரோனா பால் (Corona Milk) விற்று வருகிறார்.
கொரோனா பால் (Corona Milk)
ஆறு மாதத்திற்கு முன் தான் இந்த கடையை ஆரம்பித்தேன். அப்போதே ஒரு முடிவு எடுத்தேன். உடலுக்கு கேடு விளைவிக்காத கருப்பட்டி, நாட்டு சர்க்கரை பயன்படுத்த தொடங்கினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தால் கொரோனா பால் அறிமுகம் செய்தேன்.
கொரோனா காலத்தில் எங்கள் வீட்டில் அனைவருமே நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள், மிளகு கலந்த பாலை பருகினோம். இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். மஞ்சள், மிளகு, நாட்டு சர்க்கரை, கொஞ்சம் கருப்பட்டியும் சேர்த்து கொரோனா பால் 15 ரூபாய்கு விற்கிறேன்.
கொரோனாவின் அடுத்த வகையான ஒமிக்ரான் தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிக முக்கியம். அதனால், வீட்டிலேயே கொரோனா பால் தயாரித்து குடிப்பது நல்லது.
மேலும் படிக்க
Share your comments