நீரேற்றமாக இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஆனால் மக்கள் அதை குடிக்கும்போது தண்ணீர் எந்த வெப்பநிலை தன்மையில் இருக்க வேண்டும் என்கிற சில விவாதங்கள் உள்ளன. ஒரு சிலர் குளிர்ந்த நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்புகிறார்கள். அது உண்மையா?
செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம், கழிவுகளை அகற்றுதல், சாதாரண உடல் வெப்பநிலையை பராமரிப்பது மற்றும் உறுப்புகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்து உடல் செயல்பாடுகளுக்கும் தினமும் போதுமான தண்ணீரை உட்கொள்வது அவசியம். சரி விஷயத்துக்கு வருவோம்.
குளிர்ந்த நீர் குடிப்பது உங்களுக்கு தீமை ஏற்படுத்துமா?
குளிர்ந்த நீரை குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அதே வேளையில் ஒரு சில உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த நீரினை அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளிர்ந்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து:
உணவுக்குழாய் அல்லது அதுத்தொடர்பான உடல்நல பிரச்சினையில் உள்ளவர்கள் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Achalasia என்கிற உடல் பிரச்சினை உணவு மற்றும் பானங்களை விழுங்குவதை கடினமாக்கும்.
2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், குளிர்ந்த நீரைக் குடிப்பதால் அச்சாலசியா உள்ளவர்களுக்கு பாதிப்புகள் மேலும் மோசமடைகின்றன எனத் தெரிய வந்துள்ளது. இருப்பினும், அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் வெந்நீரைக் குடித்தபோது, அது உணவுக் குழாயை சீராக்கவும், எரிச்சலை நீக்கவும் உதவியது. உணவு மற்றும் பானங்களை விழுங்குவதற்கு எளிதாக்கியது.
குளிர்ந்த நீரைக் குடிப்பது சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும், குறிப்பாக ஒற்றைத் தலைவலியுடன் வாழ்பவர்களுக்கு. சிலர் குளிர் பானங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்வதால் தொண்டை புண் அல்லது சளி ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
குளிர்ந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடற்பயிற்சியின் போது குளிர்ந்த நீரைக் குடிப்பது ஒரு நபரின் செயல்திறனை அதிகரிக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி அல்லது விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பாக வெப்பமான சூழலில் நீரேற்றத்திற்கு சிறந்ததாக இருக்கும். குளிர்ந்த நீரினை குடிப்பதால் பிரச்சினை ஏற்படுபவர்கள், வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.
வெதுவெதுப்பான நீர் நாள் முழுவதும் அதிக தண்ணீரை உட்கொள்ள உங்களை ஊக்குவிக்கும், இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீர் வியர்வையை அதிகரிப்பதன் மூலமும், சிறுநீர் கழிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
மேலும் காண்க:
Share your comments