1. வாழ்வும் நலமும்

நிம்மதியான தூக்கத்திற்கான ஐந்து உணவுகள் இதோ!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Foods for A Restful Sleep

பலருக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது மிகவும் கடினமாக இருக்கும். இரவில் தூங்காத பிரச்சனையால் வாடுபடுபவர்களால், உற்சாகமாக வேலை செய்யவும் பிரச்சனை இருக்கும்.  ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், உங்கள் வேலை திறன் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஓய்வெடுக்க நமது உடலுக்கு குறைந்தது 8 மணிநேரம் தேவை. அப்போது தான் அடுத்த நாளை உற்சாகமாக செலவிட முடியும்.

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்,  இது குறித்து, தூக்கமின்மைக்கு வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார். உங்கள் உணவில் சேர்க்கப்படும் சில உணவுகள், உங்களுக்கு ஆழ்ந்த நிம்மதியாக உறக்கத்தை கொடுக்கும் என்கிறார்.

பாதாம்(Almonds)

பாலைப் போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதி படுத்தி. மூளையின் சக்தியை அத்திபாரித்து,உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதே நேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க பயனளிக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி  பாதாம் உட்கொண்ட பிறகு நன்றாக தூங்குங்கள்.

டார்க் சாக்லேட்(Dark Chocolate)

பாதாம் தவிர, டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

வாழைப்பழம்(Banana)

ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு  உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஊட்டசத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்  அதிகம் இருப்பதால், இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை வழங்குகிறது.

சூடான பால் அருந்துதல்(Hot Milk)

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்திற்கு நல்ல பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் அதிகமாக இருப்பதால், இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளிக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

செர்ரி பழங்கள்(Cherry Fruits)

செர்ரி பழங்களில் பினியல் சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் மெலடோனின் என்ற ஹார்மோன் காணப்படுகிறது, இது  தூக்கத்தை சீராக்குகிறது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு செர்ரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 10-12 செர்ரிகளை சாப்பிடுவது நல்ல நித்திரைக்கு வழி வகுக்கும்.

மேலும் படிக்க:

செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யாரெல்லாம் இதை தவிர்க்க வேண்டும்!

மழைக்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கான முன்னெச்சரிக்கைகள்

English Summary: Here are five foods for a restful sleep! Published on: 20 August 2021, 05:39 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.