பிளாக் குமின் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் கருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள், அவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகும். வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது.
கருஞ்சீரகத்தின் பயன்கள் (Benefits of Black cumin)
- அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் சிறிது கருஞ்சீரகத்தைப் பொடித்து எலுமிச்சம் பழச்சாறில் கலந்து குடித்தால், அஜீரணம் குணமாகும்.
- பாலில் கருஞ்சீரகம் இட்டு கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் நன்கு தூக்கம் வரும்.
- கருஞ்சீரகத்தை மையாக அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வர, முகப்பருக்கள் அமிழ்ந்து, சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
- கருஞ்சீரகத்துடன் சிறிது ஓமம் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், அதிக பேதி போக்கு நிற்கும். வாந்தி, குமட்டலை அகற்றும் தன்மை இதற்கு உண்டு.
- கருஞ்சீரகம், சுக்கு, தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.
- கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலுக்கு உடனே வெளிப்படும்.
- கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் படை, சொரி, சிரங்கு போன்றவை மறையும்.
- கருஞ்சீரகத்தை தூளாக்கி, தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
- கருஞ்சீரகப் பொடியை 4 கிராம் எடுத்து நீராகாரத்துடன் 3-லிருந்து 7- நாள் வரை காலையில் மற்றும் மாலையிலும் சாப்பிட்டு வர, விஷப்பூச்சிகடியாக இருந்தாலும், வேறு ஏதேனும் நச்சு கடியாக இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.
- கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சாக பூசி வந்தால் சரியாகும்.
- இந்தப் பொடியைக் காடி (நீராகாரம்) விட்டு அரைத்து படை இருக்கும் இடத்தில் பூசலாம். கரப்பான், சிரங்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் நல்லெண்ணெயில் கருஞ்சீரகப் பொடியைச் சேர்த்து குழைத்து பூச குணமாகும்.
- பசுவின் கோமியம் விட்டு அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பூசினால் வீக்கம் குறையும். இந்தப் பொடியை தேன் விட்டு அரைத்துப் பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் வலி குணமாகும்.
- கருஞ்சீரகப் பொடியை 1 கிராம் எடுத்து தேனுடன் சேர்த்து அல்லது நீர் கலந்து கொடுத்தால் மூச்சு முட்டல் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- கருஞ்சீரகப் பொடியை 1 கிராம் எடுத்து மோருடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் விக்கல் பிரச்னை குணமாகும்.
- 1 கிராம் பொடிய எடுத்து நீராகாரத்துடன் குடித்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறி விடும்.
மேலும் படிக்க
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா!
Share your comments