1. வாழ்வும் நலமும்

கொரோனா காலத்திற்கு ஏற்ற மஞ்சள் மசாலா பால்- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit:Anandabazaar

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, நாம் மறந்துவிட்ட பழமையான வழக்கங்களுக்கு நம்மைத் தவறாமல் அழைத்துச் செல்கிறது. அந்த வகையில், கொரோனா காலத்திற்கு ஏற்ற பானமாக பல்வேறு மாநிலங்களில் பரிமாரப்பட்டு வருகிறது மஞ்சள் போட்ட மசாலா பால்.

பசும்பாலில் மஞ்சள் மற்றும் வேறு பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் பால், மசாலா பால் எனப்படுகிறது. இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய குணாதிசயங்களைக் கருத்தில்கொண்டு, மேற்கத்தியக் கலாச்சாரத்தில், இதனைத் தங்கப்பால் என்று அழைக்கிறார்கள்.

மசாலா பால்

பசும்பாலை நன்கு பதமாகக் காய்ச்சி, அதனுடன் மஞ்சள் பொடி, இஞ்சி, பட்டை சேர்த்து, பாதாம், மிளகுபொடி மற்றும் தேங்காய் துருவல்களைக் கொண்டு அலங்கரிப்பதே மசாலா பால் அல்லது தங்கப்பால் எனப்படுகிறது. இதனுடன் இனிப்பு சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

அழகான குளு குளு மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பால், நம்மைக் கவர்ந்திழுக்கத் தவறுவதில்லை.

Credit:Today Show

தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

1/2 கப்(Cup) இனிப்பு சேர்க்காத பசும்பால்
ஒரு ஸ்பூன்(Tea Spoon) மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் இஞ்சி பொடி அல்லது சிறிய துண்டு நசுக்கியது
1/2 ஸ்பூன் பட்டை பொடி
சிறிதளவு மிளகு பொடி
1/2 ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரை
2/3 பாதாம்
1/2 ஸ்பூன் துருவிய தேங்காய்

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து கொதிக்க விடவும். பிறகு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் பாலைக் காய்ச்சி இறக்கவும். இதையடுத்து, துருவிய பாதாம் மற்றும் ஏலக்காய் பொடி கொண்டு பாலை அலங்கரித்து, ஓரளவுக்கு சூடு குறைந்ததும் பருகவும்.

ஸ்ஃபிரிட்ஜில் சேமிக்கலாம்

மஞ்சல் மசாலா பாலை, 5 நாட்கள் வரை ஸ்ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம்.  தேவைப்படும்போது மீண்டும் சூடாக்கிப் பருகலாம். மஞ்சள் கலந்த பாலை குறைந்த அளவு பருகலாம். அதிகமாகப் பருகுவது சில வேளைகளில் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

சருமப் பராமரிப்புக்கு உதவும்

ஏன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட காய்ச்சாத பாலுடன் மஞ்சள் கலந்து கலவையாக்கி, சருமப்பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். முகத்திற்கு முகப்பூச்சாகப் பயன்படுத்தினால், என்றும் இளமையைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மேலும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவு பெறும். தோல் சுருக்கங்கள், தழும்புகள் உள்ளிட்டவையும் படிப்படியாக மறையும்.

மருத்துவ நன்மைகள்

மசாலா பால் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்கும்.

செல்கள் சேதமடைவதைக் கட்டுப்படுத்தும்.

மனநலத்தை வளப்படுத்தும்

மூளையைத் தூண்டி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

இதய நோய் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏதுவாகவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவும் இந்த மஞ்சள் மசாலா பால் தற்போது அனைவராலும் விரும்பி பருகப்படுகிறது.

மேலும் படிக்க...

மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!

என்னதான் இருக்கு ஒமோகா-3 ஃபேட்டி ஆசிட்டில் - தெரிந்துகொள்ள சில டிப்ஸ்

English Summary: Here tips to Make Golden Milk and its benefits Published on: 17 July 2020, 04:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.