தினை என்பது பல்துறை தானியமாகும், இது அனைவருக்கும் மிகவும் நல்லது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பி-வைட்டமின்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும்.
தினை சாம்பார் சாதம்:
தேவையான பொருட்கள்:
- தினை-1 கப்
- துவரம் பருப்பு -1/2 கப்
- சின்ன வெங்காயம்-1 கப் நறுக்கியது
- தக்காளி-1 நறுக்கியது
- விருப்பப்பட்ட காய்கறிகள்-சிறியளவு (கத்திரிக்காய்,முருங்கை,உருளைக்கிழங்கு,கேரட்)
- பச்சை மிளகாய் -2
- புளி தண்ணீர் -சிறிதளவு
- நல்லெண்ணெய் -1 குளிக்கரண்டி
- சாம்பார் போடி -20 கிராம்
- மஞ்சள் போடி -ஒரு சிட்டிகை
- கடுகு-1 தேக்கரண்டி
- சீரகம்-1 தேக்கரண்டி
- வரமிளகாய்-3
- கறிவேப்பில்லை -சிறிய அளவு
- பெருங்காயம் -சிறிய அளவு
- கொத்தமல்லி -சிறிய அளவு
- உப்பு-தேவையான அளவு
- தண்ணீர் -5 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தினயயும் 1/2 கப் துவரம் பருப்பையும் நன்கு அலசி 2-3 மணி நேரம் ஊறவிடவும்.
பின்னர் ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு,சீரகம் ,3 வரமிளகாய்,சிறிதளவு கறிவேப்பில்லை ,பெருங்காயம் சேர்த்து பொ ரிய விடவும் பின் பச்சைமிளகாய் ,வெங்காயம் ,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்பொழுது நமக்கு விருப்பமான காய்கறிகளை (கத்திரிக்காய், முருங்கை, உருளைக்கிழங்கு, கேரட்) சேர்த்து வதக்கவும், மஞ்சள் போடி, மற்றும் சாம்பார் போடி, உப்பு(தேவையான அளவு) சேர்த்து வதக்கிய பின் புளிக்கரைசலை சேர்க்கவும். அனைத்தும் ஒன்றுசேர கொதித்த பிறகு இப்பொழுது ஊறவைத்த தினையயும் பருப்பையும் இதில் சேர்த்து, அரிசி அளந்த அதே கப்பில் 5 கப் தண்ணீர் ஊற்றவும், உப்பு பார்த்து விட்டு தேவையென்றால் சேர்த்து கொள்ளவும், பின்னர் குக்கரை மூடி நான்கு விசில் வைக்கவும், திறந்த பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால், மெய்மறக்கும் சுவையில் தினை சாம்பார் சாதம் தயார்.
உணவு கலாச்சாரங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும், மேலும் தினை அரிசி, கோதுமை போன்றவற்றுடன் ஒப்பிடும் போது அவை விளைவதற்கு மிகக் குறைவான வளங்களைப் பயன்படுத்துகின்றன. நமது உணவில் தினைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது. தினை அரிசியில் கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினை அரிசியில் புரதச்சத்து அதிகம். இதை உண்டால் உடல் வளர்ச்சி சீராகும். இது உங்கள் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நாம் சிறுதானியங்களை உண்டால் அது நமக்கு மட்டுமின்றி அதை விளைக்கும் விவசாயிக்கும் பயனளிக்கும், இது நாம் நம் பூமித்தாய்க்கும் நம் பாரம்பரியத்திற்கு ஆற்றவேண்டிய கடமை. எங்கோ விளையும் வெளிநாட்டு பயிர்களை உட்கொண்டு நம் நாட்டு பயிர்களை ஆதரிக்க மறக்கிறோம், நம் நாட்டின் பயிர்களையம், உயிர்களையும், பாரம்பரியத்தையும் காப்பது நம் முதற்கடமை. எனவே சிறுதானியங்களை உணவில் சேர்த்து நம் உடல், பாரம்பரியம், விவசாயிகள் அனைத்தையும் பாதுகாப்போம்.
மேலும் படிக்க:
Share your comments