1. வாழ்வும் நலமும்

அடர்த்தியாக முடி வளர வீட்டிலேயே தயாரிக்கப்படும் க்ரீன் டீ மூலிகை ஷாம்பு

Aruljothe Alagar
Aruljothe Alagar

Homemade Green Tea Herbal Shampoo To Grow Thicker Hair

சரியான முடி பராமரிப்புக்கு முடியை அலசுவது மிகவும் முக்கியம் ஆகும். இந்த காலத்தில் சந்தையில் பல வகையான ஷாம்புகள் உள்ளன. மேலும் சந்தையில் கிடைக்கும் இந்த ஷாம்பூக்களில் அதிக அளவு ரசாயனங்கள் உள்ளன, அவை முடிக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில், சரியான முடி பராமரிப்புக்காக நீங்கள் மூலிகை ஷாம்பூவைப் பயன்படுத்துவது முக்கியம்.

நீங்கள் வீட்டிலேயே மூலிகை ஷாம்பூ எளிதாக செய்யலாம். கிரீன் டீ மூலிகை ஷாம்பு பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

க்ரீன் டீ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல தோல் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. கிரீன் டீயிலிருந்து மூலிகை ஷாம்பூவை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.

கிரீன் டீ ஷாம்பூ செய்வது எப்படி?

  • பச்சை தேயிலை இலைகள்
  • பெப்பர் மின்ட் எண்ணெய்
  • எலுமிச்சை சாறு
  • தேங்காய் எண்ணெய்
  • தேன்
  • ஆப்பிள் சாறு வினிகர்

ஷாம்பு செய்வது எப்படி?

முதலில், பச்சை தேயிலை இலைகளை உலர்த்தி பொடி செய்யவும்.

பச்சை தேயிலை தூளில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை கலக்கவும். கிரீன் டீ மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலவையில் இரண்டு துளி பெப்பர் மின்ட் எண்ணெயை கலக்கவும். இதன் பிறகு, இந்த கலவையில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு தேன் கலக்கவும்.

கிரீன் டீ ஷாம்பூவின் நன்மைகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் பி, வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிரீன் டீயில் காணப்படுகின்றன, அவை முடி வளர்ச்சிக்கு நல்லது என்று கருதப்படுகிறது.

 கிரீன் டீயை பயன்படுத்துவது முடியில் உள்ள பொடுகு பிரச்சனையை நீக்குகிறது.

கிரீன் டீ ஷாம்பூவுடன் தலைமுடியை மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், இது முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர உதவுகிறது.

மேலும் படிக்க...

முடி, தோல் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஓமத்திலிருந்து கிடைக்கும் சூப்பர் நன்மைகள்

English Summary: Homemade Green Tea Herbal Shampoo To Grow Thicker Hair

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.