இன்றும் உலகம் முழுவதும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்நோயினால் பாதிப்பு அடைகின்றனர். சர்க்கரை நோயின் தாயகம் இந்தியா என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு வெகு குறைவு என்றே கூறலாம். நோய் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டுமே குறிப்பிட்ட இடைவெளியில் தங்களை பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
சர்க்கரை நோயினை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. மற்ற நோய்களை போல வெளிப்படையாக இந்நோயினை ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.
சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக கருதப்படுவது முறையற்ற உணவு பழக்கம், துரித உணவு என பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வகை நோய்களை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, விரைவில் இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. இதற்கு நிரந்தர தீர்வு உண்டு என ஒரு தரப்பினரும், தீர்வு இல்லை என மறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
உங்களின் பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருக்குமாயின் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும். எனவே நீங்கள் மருத்துவரை அணுகி நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.சர்க்கரை நோயினை உடலில் தோன்றும் ஓர் சில மாற்றங்களை வைத்து எளிதில் கண்டு பிடித்து விடலாம். அவற்றை கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழே பட்டியலிட்டுள்ள அறிகுறிகள் உடலில் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகவும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
- அதீத தாகம்
- அடிக்கடி சிறுநீர்கழித்தல்
- சருமம் வறண்டு போகுதல்
- கைகள் மரத்துப்போதல்
- மங்கலான கண்பார்வை
- எடைகுறைதல்
- சோர்வு
- வீக்கமடைந்த ஈறுகள்
- எப்போதும் பசி இருப்பதுபோல் தோன்றும்
- காயங்கள் மெதுவாக குணமாகுதல்
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments