போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன – இது செரிமானத்தை ஆரோக்கியமாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது, மேலும் ஒருவருக்கு மயக்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. எனவே, ஆயுர்வேதமும் தண்ணீர் குடிப்பதை பரிந்துரைப்பதில் ஆச்சரியமில்லை – ஆனால் அதற்கு சில விதிகள் உள்ளன. இங்கு ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி, தண்ணீர் குடிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
தண்ணீர் குடிக்கும் முறை (Methods of Drinking Water)
- எப்போதும் நின்றவாறு தண்ணீர் குடிக்காது. உட்கார்ந்து தண்ணீர் குடிக்கவும்.
- தண்ணீரை எப்பொழுதும் மடக்மடக்கென விழுங்ககூடாது, சிப் பை சிப் ஆக, கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும்.
- வெதுவெதுப்பான நீர் அல்லது அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கவும்., பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம். குளிர்ந்த நீர் உங்கள் செரிமான ஆற்றலைக் குறைக்கிறது.
- தண்ணீரை சேமிக்க மண் பானைகள், செம்பு அல்லது ஸ்டீல் பயன்படுத்தவும். ஓடும் தண்ணீரை ஒருபோதும் குடிக்காதீர்கள். எப்போதும் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை குடிக்கவும்.
- மேம்பட்ட செரிமானத்திற்கு, கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும், இது மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு அல்லது பாதி அளவு குறைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
- நீங்கள் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்குங்கள்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் கூட ஜீரணமாக வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் தண்ணீரின் அளவு மாறுபடும்.
உங்களுக்கு நன்றாக வியர்க்கவில்லை என்றால், மலச்சிக்கல், வாய் வறண்டு, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் குறைவாக தண்ணீர் உட்கொண்டிருக்கலாம். எனவே அதிகமாகக் குடிக்கவும்.
எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்
உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது அதற்கு முன் தண்ணீர் குடிக்கவும். ஊட்டச்சத்து இல்லாத வாதம் உள்ளவர், உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட கபம் உள்ள நபர்களுக்கு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
கோடைக்காலம் தவிர மற்ற எல்லா காலங்களிலும் சீரகத்துடன் காய்ச்சப்படும் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். அதனுடன் ஒரு கையளவு வெட்டிவேர் வேர்கள் சேர்க்கலாம்.
மேலும் படிக்க
Share your comments