சருமத்தில் இழந்த பொலிவை மீண்டும் பெற மற்றும் சுற்றுசூழல் மாசுக்களால் பாதிக்கப்பட்டு பொலிவிழந்த சருமத்தை திரும்ப பெற தற்போது பெண்களின் மத்தியில் பிரபல்யமாக உள்ளது 'ஒயின் பேசியல்'.
சிவப்பு ஒயின் பொதுவாக பேசியல் செய்ய பயன்படுத்தப்படுகிறது, இது சருமத்தின் சோர்வை போக்வும், இழந்த பொலிவை மீட்டுத்தருவதற்கும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்க்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் மெலடோனின் உடலின் தூக்க சுழற்சியை சீராக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை முற்றிலுமாக நீகுக்குகிறது.
அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களில் ஒயின் பேசியல் செய்யப்படுகிறது இருப்பினும் நம் இதை வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். வீட்டிலேயே சுலபமாக ஒயின் பேசியல் செய்வது எப்படி என்பதை விவரமாக காண்போம்.
செய்முறை:
1. ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயின் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகம் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.
2. ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன், 2 ஸ்பூன் சிவப்பு ஒயின் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் பூசி முகத்தை நன்றாக ஈரப்படுத்தவும். பின்னர் இந்தக் கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
3. சற்று சூடான தண்ணீரில் சுத்தமான ஒரு டவலை நனைத்து, முகத்தின் மேல் மூடி 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இதனால் சருமத்தில் இருக்கும் துளைகள் திறக்கும்.
4. சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சிவப்பு ஒயின், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த டவலைக் கொண்டு முகத்தை துடைத்து சுத்தப்படுத்தவும்.
5. பின்னர், சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சிவப்பு ஒயின், ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதை முகம் முழுவதும் சீராகத் தடவவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும்.
6. ஒரு ஸ்பூன் ரோஜா பன்னீருடன், ஒரு ஸ்பூன் சிவப்பு ஒயின் சேர்த்து கலக்கவும். இதை முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
7,தற்போது முகம் மென்மையாகவும் அழகாகவும் மாறியிருப்பதை நீங்கள் உணரலாம்.
மேலும் படிக்க
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி! செய்வது எப்படி?
கொரியன் Hair Care டிப்ஸ், இனி செலவில்லாமல் வீட்டியிலேயே தலைமுடியை பராமரிக்கவும்!
Share your comments