பெண்களும் சரி ஆண்களும் சரி தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் இந்த கண் கருமையானது முகத்தை சோர்வுடன் ஒரு நோயாளி போல் காண்பிக்கிறது. பார்ப்பவர்கள் அனைவரும் நோயாளி என்றே முடிவு செய்து விடுகின்றனர்.
இதற்கான காரணங்கள்
கண்களுக்கான ஓய்வு தூக்கம். சரியான நேரத்திற்கு தூங்காமல் விழித்து கொண்டு இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண் கருவளையம் உண்டாகும்.
ஓய்வின்றி அதிக நேரம் வேலை பார்ப்பதால் கருமை உண்டாக்கும். உடலுக்கு ஓய்வானது மிக அவசியம். அந்த ஓய்வு சரியாக கிடைக்க வில்லை என்றால் கருவளையம் சூழ்ந்துவிடும்,
அதிக நேரம் கணினி, மடிக்கணினி, கைபேசி பயன் படுத்துவதால் கண்களில் அதிக தாக்கம் ஏற்பட்டு கண்கள் சோர்விழந்து பெரிதளவில் பாதிப்படையும்.
சிலருக்கு சாதாரணமாகவே கண்களை தேய்க்கும் பழக்கம் இருக்கும். கண்களின் கீழ் பகுதி மிக மென்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை அடிக்கடி தேய்த்துக்கொண்டே இருந்தால் கருவளையம் உண்டாகும்.
அதிக நேரம் வெயிலில் அலைந்தாலும், வெயிலில் நின்று கொண்டிருந்தாலும் கண் கருமை உண்டாகும்.
அதிகம் சிந்திப்பது, பதட்டப்படுவது, மன அழுத்தம் போன்றவற்றாலும் கருவளையம் உண்டாகும்.
இவை அனைத்திற்கும் சிறந்த எளிய தீர்வு
தினமும் ஓய்வு நேரத்தில் அல்லது தூங்குவதற்கு முன்பு இரண்டு சிறிய அளவில் காட்டன் (cotton) கண்களின் தேவைக்கேற்ப எடுத்து அதில் சிறிது பன்னீர் நனைத்து கண்களில் வைத்து வந்தால் விரைவில் தீர்வு காண்பீர்கள். மேலும் பன்னீர் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தி நல்ல ஓய்வளிக்கும்.
உருளைக்கிழங்கின் சாறை அதே போல் காட்டனில் சிறிது நனைத்து கண்களின் மேல் வைக்க விடும். முடிந்தால் இத்துடன் பன்னீரும் சேர்த்து வைக்கலாம்.
இவ்விரண்டு முறைகளையும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கண் கருவளையம் நீங்கி முகத்தில் பொலிவு கூடும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments