How to use beetroot to get rid of dandruff?
நம்மை பொறுத்தவரையில் விலை உயர்ந்த காய்கறி, பழவகைகளில் தான் அதிகம் சத்து நிறைந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதே சமயம் சில காய்கறிகளில் பல மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். உடலில் ஏதோ ஒரு பிரச்னை வந்து, மருத்துவமனை பக்கம் ஒதுங்கும் போதுதான் நாம் ஒதுக்கிய காய்கறிகளின் மகத்துவம் புரிகிறது. அதில் மிகவும் முக்கியான காய்கறி பீட்ரூட் (Beetroot). இந்த காயில் உள்ள ஒரு வகை இனிப்பு சிலருக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இதனாலே ஏராளமான நல்ல விஷயங்களை கொண்ட பீட்ரூட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.
மருத்துவ குணங்கள் (Medicinal Benefits)
- பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், தாமிரம், செலினியம், துத்த நாகம், இரும்புச் சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
- வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு தேனுடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் விரைவில் குணமாகிவிடும்.
- பீட்ரூட் சாறை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். மூலநோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கஷாயம் போட்டு குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
- தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், கொழுப்பின் அளவு குறையும். ஜூஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்று நோய் ஏற்படுத்தும் செல்களை அழித்து விடும். இதனால் புற்றுநோயைத் தடுக்கலாம்.
- பீட்ரூட் சாறு மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முதுமையில் ஏற்படும் மறதி நோயான ‘டிமென்சியா’, ஞாபக மறதி நோயான ‘அல்சைமர்’ போன்றவையை தடுக்கும்.
- உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
- பீட்ரூட்டை எலுமிச்சைச் சாறில் நனைத்து பச்சையாகச் சாப்பிட்டால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
- சருமத்தில் தாங்க முடியாத அளவு அரிப்பு ஏற்பட்டால் பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி அரிப்புள்ள இடத்தில் தடவினால் உடனே அரிப்பு நீங்கிவிடும்.
- கையை தீயில் சுட்டுக் கொள்ள நேர்ந்தால் பீட்ரூட் சாறை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்பளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.
- பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் வேக வைத்த நீரில் வினிகரை கலந்து தலைக்குத் தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகைப் போக்கிவிடலாம்.
- கல்லீரல் கோளாறு, ரத்த சோகை, செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் பிரச்னை நீங்கும். இப்பிரச்னைகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
மேலும் படிக்க
விவசாயத்தில் கோமியப் பயன்பாடு: உத்தரவு பிறப்பித்தது சத்தீஸ்கர் அரசு!
Share your comments