நாம் எத்தனைதான் உணவிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினாலும், உடல் நலம் தொடர்பான சில விஷயங்களில் கோட்டை விட்டுவிடுவோம்.
அன்றாட உணவில் (In the daily diet)
இதனைத்தவிர்க்க வேண்டுமானால் சில உணவுப் பொருட்களை நம் அன்றாட உணவில் இடம்பெறச் செய்வது அவசியமாகிறது. அந்த வரிசையில் ஆம்லா முதல் ஏலக்காய் வரை, இதுபோன்ற சில மசாலாப் பொருட்கள் உள்ளன, அவற்றை உட்கொள்வதை நம் வழக்கமாக மாற்றிக்கொண்டால், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவில் சில மூலிகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவைகள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகின்றன.
பெருஞ்சீரகம் (Fennel)
உணவு செரிமானத்துடன், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. நீங்கள் வெந்தயத்தை நீரில் போட்டி காய்த்து அதைக் குடிக்கலாம்.
நெல்லிக்காய் (Gooseberry)
ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு முடி ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிடுவதால் உங்கள் கண்பார்வையும் மேம்படும்.
நெல்லிக்காய் ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
ஏலக்காய் (Cardamom)
உங்களுக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால், ஏலக்காயை எடுத்துக் கொள்ளலாம். ஏலக்காயில் உள்ள எண்ணெய் ஆனது பாக்டீரியா மற்றும் பூஞ்சை கொல்ல உதவுகிறது.
மஞ்சள்
மஞ்சள் உணவில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள். மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. மஞ்சள் மூட்டு பிரச்சனைக்கு விரைவில் நிவாரணம் அளிக்கும்.
இலவங்கப்பட்டை (Cinnamon)
இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீங்கள் இவற்றைத் தேநீர், காபி மற்றும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!
பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!
Share your comments