1. வாழ்வும் நலமும்

pazhaya soru: பழைய சோற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
pazhaya soru

கோடைக்காலம் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது 100 டிகிரிக்கும் மேல் கொளுத்தி வரும் நிலையில், நாளடைவில் நம் உணவு முறையிலிருந்து விலக்கி வைத்துள்ள பழைய சோற்றின் அருமை பெருமைகளை வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-

கிராமங்களில் வசிக்கும் இன்றைய முதியவர்களிடம் உங்க ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன என்று கேட்டால் சட்டென பதிலாக வருவது, "எங்க காலத்துல பழைய சோறும் கேப்பை கூழுமா.. குடிச்சு வளர்ந்தோம்” என்று தான் வரும். அந்த வகையில் பழைய சோற்றின் அருமைகளை குறித்து நாம் இங்கே காணலாம்.

பழைய சோற்றின் அருமைகள்:

அந்தக்கால திரைப்படங்களில் (B&W) கதாநாயகி தூக்குவாளியில் பழைய சோற்றை எடுத்துக் கொண்டு வயலில் வேலை செய்யும் கதாநாயகனுக்கு கொடுப்பதாக காட்சிகள் இல்லாத படமே இல்லை எனலாம். ஆனால் இன்று, கிராமங்களில் கூட பழைய சோற்றினை உண்ணும் பழக்கம் காணாமல் போய்விட்டது.

இதற்கு மத்தியில் தான், சமீபத்தில் அமெரிக்கன் உணவு கழகம் (AMERICAN NUTRITION ASSOCIATION) பழைய சோற்றின் அருமை பெருமைகளை பட்டியலிட்டது. இதன்பின், பழைய சோற்றினை தேடி உண்ணும் அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியது. அதுவும் அதிக விலை கொடுத்து நட்சத்திர உணவங்களில் வாங்கிட இன்றைய தலைமுறை ஆர்வமாக உள்ளது.

பாரம்பரிய உணவு முறையில் பழையசோறு:

பல நூறு ஆண்டுகளாக பழைய சோற்றை சாப்பிட்டு வந்த பழக்கம் நம்முடைய தென்னிந்தியா பாரம்பரியத்திற்கு உண்டு. வடித்த சாதத்தை (மதிய உணவாக) உண்ட பின் மீதியுள்ள சோற்றில் (சாதம்) தண்ணீரை ஊற்றி விடுவார்கள். அடுத்த நாள் அதை பழைய சாதமாகி தண்ணியும் கஞ்சியுமாக பருக்கையுடன் இருக்கும். அந்த தண்ணீர் தான் (காபி, தேநீர்) நம் வாழ்வில் ஆக்கிரமிப்பதற்கு முன்பாக வயல் வேலைக்கு செல்லுபவர்கள் பருகி வந்தனர். நீராகாரம் ருசியானதுமட்டமல்ல, மருத்துவ குணமும் வாய்ந்தது.

பழைய சோற்றிலுள்ள சத்துகள்:

பழைய சோற்றில் (FERMENTATION RICE) புரத சத்து, பொட்டாசிய சத்து, சுண்ணம்புசத்துகள் இருப்பதுடன் மட்டுமல்லாமல் குடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் (LACTIC ACID BACTERIA) டிரில்லியன்ஸ் அளவில் இருப்பதோடு, வைட்டமின் 6, மற்றும் B12 ஆகியவையும் உள்ளன. 100 கிராம் கஞ்சியில் 134 கலோரி உள்ளது. (எடுத்துக்காட்டாக வடித்த சாதத்தில் இரும்பு சத்து 3.4 மில்லி கிராமாக இருந்தால் அது பழைய சோற்றில் 73.91 மில்லி கிராமாக இருக்கும்).

பழைய சோற்றின் நன்மைகள் தெரியுமா ?

  • காலை உணவாக பழைய சாதத்தை எடுத்துக்கொண்டால் உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
  • குடல்புண்,அல்சர் போன்ற நோய்களுக்கு அருமருந்து.
  • மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக்க வைத்திருக்கும்.
  • இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • அலர்ஜி, அரிப்பு போன்றவற்றை சட்டென குணமாக்கும்
  • எல்லாவற்றிற்கு மேலாக நோய் எதிர்ப்பு திறனை உண்டாக்கும்.

நாம் உட்கொண்ட பழைய சோற்றின் அருமை பெருமைகளை நாம் மறந்து போனநிலையில் வெளிநாட்டினர் அதனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இன்று ஆன்லைனில் கூட பழைய சோறும் நீராகாரமும் விற்பனை செய்யப்படுகின்றன, என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லாவா? என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் முரண்கள்/தவறுகள் இருப்பின் அக்ரி சு.சந்திரசேகரன் (94435 70289) அவர்களை தொடர்புக் கொள்ளலாம்).

Read more:

உதிரும் இலைச் சருகுகளை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?

English Summary: Interesting facts and Health benefits of pazhaya soru Published on: 07 May 2024, 06:25 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.