மழைக்காலம் (Monsoon) என்பது அனைவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் காலம் தான். இருப்பினும், மழைக்காலம் குழந்தைகளுக்கு ஏராளமான நோய்களையும் கொண்டுவருகிறது.
மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்களும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற பிற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
10 மடங்கு பாதிப்பு (10 times the impact)
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்களும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. மழைக்காலத்தில், உணவு மூலம் பரவும் நோய்களின் பாதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
சாதாரண சளி காய்ச்சல் முதல், டெங்கு மற்றும் மலேரியா, வயிற்றுப்போக்கு உட்பட பலவிதமான் பருவ கால நோய்களில் இருந்து, உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க சில எளிய வழிகளை இங்குப் பட்டியலிடுகிறோம்.
சுறுசுறுப்பான வாழ்க்கை (Active life)
தற்போதைய COVID-19 நிலைமை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, விளையாட்டுகள் போன்ற உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுத்துவது சவாலாக இருக்கலாம். அதனால், யோகா, நடனம் போன்ற விஷயங்களில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்த முயற்சிக்கவும்.
சத்தான உணவு (Nutritious food)
உங்கள் குழந்தைகளின் உணவில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவு மற்றும் காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறந்தது. அது பச்சை இலை காய்கறிகளாகவும் இருக்கலாம், பருவகால பழங்களின் கலவையாகவும்கூட இருக்கலாம். பழங்களை அவர்களுக்கு பிடித்த வகையில் ஜூஸாகவோ, ஷேக்கால்கவோ செய்து கொடுக்கலாம்.
வைட்டமின் சி (Vitamin C)
வைட்டமின் சி நோய் எதிர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக உலகளவில் COVID-19 தொற்றுநோயால் விட்டமின் சியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆப்பிள், வாழைப்பழங்கள், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை அதிகம் கொடுக்க வேண்டும்.
துரித உணவைத் தவிர்த்தல் (Avoid fast food)
உங்கள் குழந்தைக்கு பிடித்த பீஸ்ஸா அல்லது பர்கரை வாங்கிக் கொடுக்கக் கூடாது. மழைக்காலங்களில், துரித உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழைக்காலம் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நேரம்.
சுகாதாரம் (Health)
இன்றைய காலகட்டத்தில், தூய்மை, தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிப்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கும், சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.
தேங்கி நிற்கும் நீர் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக இருக்கும். கொசுக்களிலிருந்து உங்களைக் காப்பாற்ற விரும்பினால், அவர்களைப் பாதுகாக்க ஒரு கொசு வலை, ஆல்-அவுட், ஒரு கொசு விரட்டும் பேட்ச் அல்லது கிரீம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க...
Share your comments