நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோயாகும், இது கவனிக்கப்படாவிட்டால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நிரந்தர தீர்வுக்கான சிகிச்சை இல்லை என்றாலும், உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை சிறப்பாக கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
சில உணவு வகைகள் இரத்த சர்க்கரை அளவுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது மற்றும் அத்தகைய நீரிழிவு சூப்பர்ஃபுட் வகைகளில் ஒன்று தான் பாகற்காய். அதன் கசப்பான சுவை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையில் உதவும் என்பதை தெரிந்துக் கொண்டால் அதை வெறுக்கவே மாட்டீர்கள்.
பாகற்காய் ஆற்றல் மிக்க சத்துகள் நிறைந்த ஒரு காய்கறி வகையாகும். இதில் இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும், இது வைட்டமின் பி1, பி2, பி3, பி9 மற்றும் சி ஆகியவற்றின் நன்கு அறியப்பட்ட மூலமாகும். பாகற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது மட்டுமல்ல, கல்லீரலைச் சுத்தப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உணவில் ஒரு பகுதியாக பாகற்காய் இணைப்பது பல்வேறு நன்மைகளை வழங்கும்.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: பாகற்காயானது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலமும் கல்லீரலில் குளுக்கோஸ் தொகுப்பைக் குறைப்பதன் மூலமும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
அழற்சி எதிர்ப்பு விளைவுகள்: பாகற்காயில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்ட இரசாயனங்கள் உள்ளன. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற கோளாறுகளின் அறிகுறிகளை எளிதாக்க உதவும்.
நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு: பல ஆராய்ச்சிகளில் பாகற்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் மற்றும் உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. செரிமான ஆரோக்கியம்: பாகற்காயில் செரிமான நொதிகளின் தொகுப்பை அதிகரிப்பதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் செரிமானத்திற்கு உதவும்.
பாகற்காய் தொடர்பான ஆய்வுகள் உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு பயனுள்ளதாக நிருபிக்கப்பட்டிருந்தாலும், அவற்றினால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த போதுமான ஆய்வு முடிவுகள் இன்னும் நம்மிடமில்லை. நீங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பாகற்காய் அல்லது அதுப்போன்ற எந்தவொரு சப்ளிமெண்ட் உணவையும் உங்கள் உணவு முறையில் சேர்ப்பதற்கு முன்பு அதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
பாகற்காய் சக்திவாய்ந்த இரத்தச் சர்க்கரைக் குறைவு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்களுக்கு பாகற்காயினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல ஆய்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில். சில ஆய்வு முடிவுகள் உங்கள் பார்வைக்கு,
ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி (2011): ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. வகை 2 நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 2000 மி.கி பாகற்காய் உட்கொள்ளும் போது, அவர்களிடையே ஃப்ருக்டோசமைன் அளவு குறைவதை ஆய்வு கண்டறிந்தது.
https://pubmed.ncbi.nlm.nih.gov/21211558/
எகிப்திய மருந்துப் பத்திரிகை (2015): இவற்றில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாத, அதே நேரத்தில் இரத்தச் சர்க்கரையினை குறைக்க பாகற்காய் உதவலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
https://journals.lww.com/egpj/pages/default.aspx
மேலும் காண்க:
Share your comments