1. வாழ்வும் நலமும்

பாட்டி வைத்தியம் சரியா? என்ன சொல்கிறது மருத்துவ ஆராய்ச்சி!

R. Balakrishnan
R. Balakrishnan

Grandma Remedy

'காயம் பட்ட இடத்தில் தேன் தடவினால் குணமாகும்; ஏலக்காய் மென்றால் மன அழுத்தம் குறையும்; கண்களின் ஆரோக்கியத்திற்கு மீன் எண்ணெய் நல்லது; கொய்யா இலை கஷாயம் குடித்தால், பல், ஜீரண மண்டலத்தில் உள்ள கிருமி அழியும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடும்' என்று பாட்டி சொல்வதை கேட்டிருப்போம்.
பாட்டி வைத்தியம் அனைத்தும் உண்மையில் தீர்வு தருமா என்று, மருத்துவ ஆராய்ச்சி செய்யப்பட்டது.

உறுதி செய்யப்பட்டவை (Confirmed)

மோர் (Butter milk)

தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைய, அந்த இடத்தில் மோர் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். மோரில் உள்ள, 'லாக்டிக், அஸ்கார்பிக்' அமிலம், தோலை மென்மையாக்கி, வயதாவதால் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்கிறது.

நல்லெண்ணெய்

பாத அளவுக்கு பொருத்தம் இல்லாத செருப்பு, ஷூ அணிந்தால், இறுக்கிப் பிடிக்கும் தோல் பகுதி கறுத்து விடும். அந்த இடத்தில் தினமும் தொடர்ந்து ஒரு மாதம் நல்லெண்ணெய் தேய்த்து கழுவினால், கறுப்பு மறைந்து விடும்.

வாழைக்காய்

வைரஸ் தொற்றால், பெருங்குடலில் அளவுக்கு அதிகமாக கெட்ட பாக்டீரியா உற்பத்தியாகி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், வாழைக்காயை அவித்து சாப்பிட்டால், இதில் உள்ள அதிக நார்ச்சத்து, பெருங்குடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான நீரை சமன் செய்யும். பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும்.

துளசி

நுாறு டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால், 20 துளசி இலைகள், இரண்டு கிராம்பு, 1 லிட்டர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அரை லிட்டராக வற்றியதும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, கால் டம்ளர் குடிக்கலாம்.

மேலும் படிக்க

மன அழுத்தத்தை சமாளிக்க 10 எளிய வழிகள்!

எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள்: உஷாரா இருங்கள்!

English Summary: Is Grandma Remedy Right? What Medical Research Says!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.