மழைக்காலம்தான் நோய்களுக்குச் சிவப்புக்கம்பளம் வரவேற்கும் என்பதற்காகக் கோடை காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெனில் கோடைகாலம்தான் பலவித சர்மப் பிரச்னைகளுக்கு அடித்தளம் அமைக்கும்.
அக்கறை அவசியம் (Care is essential)
எனவே கோடை காலத்திலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. அதிலும் இந்த உணவுகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை (Things to avoid)
கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.
புளிப்பு, காரம் கூடாது (Sour, not salty)
வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்குக் காரத்தைத் தரும் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
எண்ணெய் பலகாரங்கள் (Oil forks)
எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
குளிர்பானத்தின் ஆபத்து (Danger of soft drinks)
கோடை என்ற உடனேயே நம் நினைவுக்கு வருவது, தாகம் தீர்க்கும் குளிர்பானங்கள். ஆனால், அவற்றில் ஐஸ்கட்டிகள் போட்டுக் கூடுதல் குளிர்ச்சியோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பது உறுதி. குளிர்ச்சியான குளிர்பானங்களில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது. இது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும்.
பழச்சாறு பருகலாம் (Drink fruit juice)
அதேநேரத்தில் பழச்சாறுகளை ஐஸ்கட்டிகள் இல்லாமல் பருகுவது நல்லது.
ஐஸ் வாட்டர் வேண்டாம் (Do not ice water)
அதேநேரத்தில் கோடைகாலத்தில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. ஏனெனில் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி நம் உடலில் வெப்பத்தின் அளவை அதிகரித்து, பல்வேறுச் சிக்கல்களைக் கொண்டுவரும். எனவே கவனத்துடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
தவிர்க்க வேண்டியவை (Things to avoid)
வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
பாஸ்ட் ஃபுட் (Fast food)
அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் (Cheese, Milk, Curd) போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை. அதேபோல, சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் ஃபுட் (Fast Food) உணவு வகைகளையும் சாப்பிடுவதை அறவே தவிர்த்திட வேண்டும். கோதுமை, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மேலேக் கூறிய உணவு வகைகளைத் தவிர்த்து, கோடை காலத்திலும் நம் உடல்நலம் காப்போம்.
மேலும் படிக்க...
சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டகாசமான டையட் லோ கிளைசெமிக்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
Share your comments