மாதத்தில் 22 நாட்கள், சத்தான, ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு சாப்பிடுபவர், ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும். நடை பயிற்சி, 'ஜாகிங்' நல்ல பலனைத் தரும். உடலின் எந்த பாகம் குண்டாக உள்ளதோ, அதற்கு மட்டும் உடற்பயிற்சி (Excercise) செய்வதும் தவறு. உடல் எடையை சீராக குறைக்க முற்படுவதே சாலச் சிறந்தது. ஆகையால், உடல் எடையைக் குறைப்பதில் பொறுமை மிக அவசியம்.
உடற்பயிற்சி (Excercise)
அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம் என்பதைத் தவிர, எந்த பலனும் கிடையாது. தலை முதல் கால் வரை, ஒரே சீராக எல்லா தசைகளுக்கும் வேலை தரும் விதமாக உடற்பயிற்சி இருக்க வேண்டும்.
மாதத்தில், 1.5 முதல் 2 கிலோ வரை சீராக எடையைக் குறைப்பது தான் நீண்ட பலன்தரக் கூடியது. தண்ணீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். ஆனாலும், ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, எடை குறைய உதவும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முக்கியமாக தின்பண்டங்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து விடுவது மிக நல்லது.
மேலும் படிக்க
கல்லீரலைப் பாதுகாக்க இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க!
நீரிழிவு முதல் மன அழுத்தம் வரை: உடல்நலன் காக்கும் நடைப்பயிற்சி!
Share your comments