நம் முன்னோர்களில் உடல் ஆரோக்கியத்திற்கு அரிசி சாப்பாடே பலம் சேர்த்தது என்கிறார்கள். ஆனால், தற்போது அரிசி உணவை அதிகம் சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என சில வர்த்தக நிறுவனங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. உண்மை அதுவல்ல. அரிசி சாப்பாடு எந்த வகையிலும், உடல் எடைக் கூடுவதற்கு வழி வகுக்காது. இருப்பினும் அரிசி சாப்பாட்டை நாம் எந்த நேரம் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.
நீங்கள் எப்போது, எந்த நேரத்தில் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தால் போதும் என்கின்றார்கள் நிபுணர்கள். அரிசியைப் பொங்கலாக செய்து சாப்பிட்டாலோ, அதில் குழப்பு காயோடு சாப்பிட்டாலோ, அதில் அமினோ அமிலங்களும், அரிசியில் உள்ள ஊட்ட சத்துக்களும் சேர்த்து நன்மை பயக்கும்.
ஏனெனில், வெள்ளை மற்றும் பழுப்பு அரிசியில் க்ளூடன் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெள்ளை அரிசி உடல் பருமனை அதிகரிக்கும் என்று நம்பும் பலர் பழுப்பு அரிசி சாப்பிட வேண்டும் என்கிறார்கள். பழுப்பு அரிசியில் அதிக தாதுக்கள் உள்ளது. தவிடு நார்ச்சத்து நிறைந்த பகுதியாகும். அதனால் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதற்காக வெள்ளை அரிசியால் எடை கூடும் என்பதல்ல.
கலவை சாதம் எனப்படும் வெரைட்டி ரைஸ் சாப்பிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கலவை சாதம் சாப்பிடும் போது, உடல் பருமன் அதிகரிக்காது. அதாவது, உங்கள் ஆரோக்கியத்தையும் எடையையும் பராமரிக்க விரும்பினால், காய்கறிகள் சேர்த்த அரிசியை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!
Share your comments