உடல் ஆரோக்கியத்திற்கும், பழச்சாறுகளுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அதிலும் கொளுத்தும் வெயிலுக்குப் பழங்களை எடுத்துக்கொள்வது நமக்கு பல வகைகளில் பலன் தரும். பழங்களும் பழச்சாறுகளும் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகிற்கும் உகந்தவை. பழங்களும் பழச்சாறுகளும் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை,அழகிற்கும் தேவை பழங்களின் சேவை.
அருமருந்து
பல்வேறு நோய்களின் அபாயத்தைத் தணிக்க ஆரோக்கியமான பழச்சாறுகளை நல்லது. இவை, நீரிழிவு முதல் ஆஸ்துமா வரை பல நோய்களையும் தவிர்க்கச் செய்யும் அருமருந்தாகும் இனிமையான உணவுகள்.
உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி
பழங்கள் அல்லது காய்கறிகள் மட்டுமல்ல, ஃப்ரெஷ்ஷான ஜூஸ் குடிப்பதால், உடலும் உள்ளமும் உடனடியாக ஃப்ரெஷ்ஷாகும். புத்துணர்ச்சியைத் தரும் பழச்சாறுகள் சுவையானது மட்டுமல்ல, அவற்றில் உள்ளதாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அவசியமானவை.
பழச்சாறுகளை குடிக்க ஆரம்பித்தவுடன், ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவில் வித்தியாசத்தைக் கண்கூடாக காணலாம்.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!
Share your comments