நாம் பள்ளியில் படித்திருப்போம், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை தள்ளி வைக்கலாம் என்ற பொன்மொழியை . இதில் அதிக உண்மைகள் இருக்கிறது. ஆப்பிளில் உடல் எடை குறைக்க உதவும் சத்து இருக்கிறது. இதில் இருக்கும் நார்சத்து மற்றும் நீர்சத்து நமக்கு நன்றாக சாப்பிட்ட உணர்வை தருகிறது.
ஆப்பிள் (Apple)
ஆப்பிள், நமது இதயத்திற்கு நன்மை தருகிறது. இதில் இருக்கும் பினால்ஸ், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது கூடுதல் நன்மை தருகிறது. டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் சதவிகிதம் இதனால் குறையும். மேலும் இது குடலுக்கு மிகவும் நல்லது.
இதன் முழுப் பயனை பெற வேண்டும் என்று நினைத்தால், காலை எழுந்தவுடன் ஆப்பிள் சாப்பிட வேண்டும். நேரடியாக முடிவில்லை என்றால் ஸ்மூத்தியாக குடிக்கலாம். அல்லது சாலடில் சேர்த்து போட்டி சாப்பிடலாம். ஏபிசி ஜீஸ் குடிக்கலாம்.
இதில் ஆபிள் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இயற்கையான பொலிவை தருகிறது.
மேலும் படிக்க
Share your comments