1. வாழ்வும் நலமும்

அரிசிகள் பல ரகம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்! - அனைத்திலும் அற்புத பயன்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Paddy Field

இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான நெல் ரகங்களை நம் முன்னோர்கள்  பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. அவர்களின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஆதாரமே இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். நெல்லின் தன்மையையும், வளரும் விதத்தையும் பொருத்து நெல் வகைகள் பகுக்கப்பட்டிருந்தன.

சம்பா நெல்!

பாரம்பரிய நெல் வகைகளில் சம்பா வகைகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இவ்வகை நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் பல வகைகள் உள்ளன, வெகு குறைந்த அளவிலான ரகங்களே தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது. சம்பா சாகுபடியானது புரட்டாசி அல்லது  ஐப்பசி பருவத்தில் நீண்டகால பயிராக விதைப்பார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு தையில் அறுவடை செய்து பொங்கல் வைப்பார்கள்.

Rice Varieties

சம்பா நெல் ரகங்கள்    

அரும்போக சம்பா, இராவணன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, ஈர்க்குச் சம்பா, கட்டை சம்பா, கப்பச்சம்பா, கருடன் சம்பா, கருப்புச் சீரக சம்பா, களர்சம்பா, கர்நாடக சீரக சம்பா, கல்லுண்டைச் சம்பா, காடைச் சம்பா, காளான் சம்பா, கார்த்திகை சம்பா, கிச்சலி சம்பா, குண்டுச் சம்பா, குறுஞ்சம்பா, குன்றிமணிச்சம்பா, கைவரச்சம்பா (தங்கச் சம்பா), கோடைச் சம்பா, கோரைச் சம்பா, சம்பா மோசனம், சடைச் சம்பா, சிவப்பு சீரகச் சம்பா, சீரகச் சம்பா, செஞ்சம்பா, தோட்டச் சம்பா, பெரிய சம்பா, புனுகுச் சம்பா, புழுகுச் சம்பா, பூஞ்சம்பா, மல்லிகைப்பூ சம்பா, மணிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, மிளகுச் சம்பா, மைச்சம்பா, நரிக்குருவை நீலச்சம்பா, வளைத்தடிச் சம்பா, வாடன் சம்பா, வாலான் சம்பா, வெள்ளை சீரக சம்பா.

மருத்துவ பயன்கள்

இலுப்பைப் பூச்சம்பா

பித்தத்தினால் உண்டாகும் உடல் உபாதைகளை தீர்க்க கூடியது. சிரஸ்தாபம் (தலை வலி) , உபசர்க்கதாகம், உஷ்ணம் போன்றவற்றை தீர்க்க கூடியது.

ஈர்க்குச் சம்பா

இவ்வகை சம்பா பெரும்பாலும் பூஜைக்கு அதிகமாக  பயன்படுத்துகின்றனர். பார்க்கும் போதே உண்ண தோன்றுவதுடன் சுவையும் மிக்கதாக இருக்கும்.

Golden Samba Field

தங்க சம்பா

பெயருக்கு ஏற்றார் போல் இதை உண்ணும் போது உடல் நிறம் மாறும். புரத சத்து, வைட்டமின், தாது உப்புகள் நிறைந்தது. மேலும் வாழ்நாள் அதிகரிப்பதுடன் உடல் ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் வலுவடையும்.

கல்லுண்டைச் சம்பா

இதன் பெயரை பார்க்கும் போதே இதன் குணம் தெரிந்திருக்கும். இதை உண்பவர்கள் யாராக இருந்தாலும்  மல்யுத்த காரரை எதிர்க்கும் அளவிற்கு தோள் வலிமையை தரும் என்பார்கள்.

காடைச் சம்பா

காடைச்சம்பா அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பல்வேறு நோய்களையும் குணமாக்கும் அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. 

காளான் சம்பா

உடலுக்கு உறுதியையும், ஆரோக்கியத்தையும் தருவதுடன் சில வாத நோயினையும் குறைக்கும் தன்மை கொண்டது.

கிச்சிலிச் சம்பா

கிச்சலி சம்பா தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் பலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் தேகச் செழுமையாகும். 

குறுஞ் சம்பா

வாதம், பித்தம் என இரண்டிற்கும் ஏற்றது இந்த குறுஞ்சம்பா. உடலில் கரப்பா பிரச்சனை இருந்தால் அவை நீங்குவதுடன், ஆண்களுக்கு விந்து விருத்தியை உண்டாக்கும்.

குண்டு சம்பா

இவ்வரிசியை  உண்பதால் உடலில் உள்ள பிணி நீங்குவதுடன் நாவறட்சியைப் போக்கும். மேலும் பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.

குன்றிமணிச் சம்பா

உடலில் தோன்றும் சிறுசிறு உபாதைகளை நிக்கி  சரீர பலம் தரக்கூடியது.

Traditional Rice

கைவரை சம்பா

வறட்சியை தாண்டி அனைத்து நிலத்திலும் வளர கூடியதும். உடலுக்கு அதிக வலிமையை தருவதுடன் சற்று  பித்தத்தையும் அதிகரிக்கும். அளவோடு உண்பது சாலச் சிறந்தது.

கோடைச் சம்பா

கோடைச் சம்பா அரிசி வாதம் மற்றும் பித்த நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலிற்கு நல்ல குளிர்ச்சி  தரும் வல்லமை கொண்டது. கோடைக்கு ஏற்ற அரிசி என்பதால் இதனை கோடைச் சம்பா என்று கூறப்படுகிறது.

கோரைச் சம்பா

கோடை காலத்திற்கு ஏற்றது, இது உடலில் உள்ள பித்தம், நமைச்சல் போன்றவற்றை போக்குவதுடன், உடல்  சூட்டை தனித்து குளிர்ச்சியை தர வல்லது.

மாப்பிள்ளை சம்பா

பழங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கு இவ்வரிசியினை கொடுப்பார்கள்.  அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி, புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர கூடிய தன்மை கொண்டது.

மணிச்சம்பா

'நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்’, நீரழிவு நோயாளிகளுக்கேன்ற ஒரு அரிசி இருக்கிறது என்றால் அது மணிச் சம்பா என்று கூறும் அளவிற்கு அத்துணை சத்துக்களை உள்ளடக்கி உள்ளது. அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும். உடலை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

மல்லிகை சம்பா

கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் போன்றவற்றை போக்கும். உண்பதற்கு ருசியாகவும், தேகத்திற்கு உறுதியையும், சுகத்தையும் கொடுக்கும்.

Ancient Grains

மிளகு சம்பா

மிளகு சம்பா அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது வாதம் போன்ற பலவிதமான நோயைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்காலத்தில் மல்யுத்த வீரர்கள் இவ்வரிசியினை உண்டு உடல் வலிமை பெற்றனர் எனக் கூறப்படுகிறது.

மைச்சம்பா

எளிதில் செரிமானம் ஆவதுடன், வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை நிக்கும்.

புழுகுச் சம்பா

இந்த அரிசியை உண்பவர்களுக்கு உடலில் வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

வளைத்தடிச் சம்பா

இவ்வரிசி வாத, பித்த போன்ற தொந்தரவுகளை தர கூடியது. வயிற்று உப்புசம், வயிற்று எரிச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

Brown Rice

சீரகச் சம்பா

 “சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் –  வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே!

இதன் பொருள் இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்  என்பதாகும். வாத நோய், குடல் புண், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.  

நீலச்சம்பா

இந்த அரிசியை தொடர்ந்து உண்டு வந்தால் ரத்த சோகை நீங்குவதுடன் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

வாடன் சம்பா

அதீதமான மருத்துவக் குணமும் கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் என்பதால் குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியைத் தான் பயன்படுத்துவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த இந்த நெல் இரகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும் சிறந்ததாகும். அதுமட்டுமல்லாது மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட சொல்வார்கள்.

வாலான் சம்பா

இந்த நெல் இரகத்தில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் குடல் சுத்தமாகும், தேகம் அழகு பெறும், பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

மேலும் படிக்க...

சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Its Time to Rediscover Our Ancient Varieties of Samba and its Health Benefits Published on: 11 October 2019, 05:53 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.