1. வாழ்வும் நலமும்

இதை மட்டும் சாப்பிட்டால் போதும்-நீங்களும் ஆவீங்க fit and slim!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Just eating this is enough to make you fit and slim!

உடல் ஆரோக்கியம் என்பது, உடலுக்குத் தேவைப்படும் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதுடன் நிற்பதில்லை. கொழுப்பு எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளையும், பானங்களையும் தவிர்ப்பதிலும்தான் அடங்கியுள்ளது.

ஃபிட் அன்டு ஸ்லிம் (Fit and slim)

அவ்வாறு உடல் பருமனைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களா நீங்கள்? இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

பதம் பார்க்கும் நோய்கள் (Term-seeing diseases)

உடல் பருமன் காரணமாக உடலில் பலவைப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில், டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம் உள்ளிட்டவை முதன்மையானவை.

பிற நோய்கள் (Other diseases)

இது தவிர குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்க சுவாசதடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு ஆகிய பாதிப்புகளும் பொதுவாக ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி (Exercise)

  • எனவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது மிகவும் எளிது. 

  • குறிப்பாகக் கொழுப்புள்ள உணவைத் தேவைக்கு அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை ஜீரணிக்க வைத்துவிட வேண்டியது மிக மிக அவசியம்.

கொழுப்பு சேராமல் (Without adding fat)

உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவு அவசியம் (Breakfast is a must)

உடல் எடையை குறைக்கிறேன்’ எனப்பலரும் காலையில் சிற்றுண்டியை தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாகிவிடும். எனவே, காலை உணவு கட்டாயம்.

காலையில் கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம். காலை டிபனுக்கு கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, மிளகுத்தினை பொங்கல் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை (Things to avoid)

தேங்காய் சட்னிக்கு பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.
கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

சாப்பிட வேண்டியது (To be eaten)

பதிலாக வேர்க்கடலை, எள்ளு உருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழச் சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.

500 கிராம் காய்கறி (500 g vegetable)

மாலையில் பழச்சாறு, காய்கறி சூப் சாப்பிடுங்கள். கீரைகள், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய்கறி உடலுக்கு தேவை.

பழவகைகள் (Fruits)

மேலும் கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அத்துடன் உடல் பருமனையும் குறைக்க உதவும்.

மேலும் படிக்க...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புளி! நன்மைகள் !

உடல்நல அபாயங்கள் தரும் மஞ்சள் மற்றும் அதன் பக்க விளைவுகள்!

English Summary: Just eating this is enough to make you fit and slim! Published on: 27 August 2021, 08:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.