நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று தீவீரமாக பரவி வருகிறது. எனவே தற்போது, மக்களின் சுகாதாரம் உறுதிசெய்யப்படுவதை மையப்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, பலவிதமான சானிடைஸர்கள் (Sanitizers), முகக்கவசம் (Face mask), கையுறைகள் (Gloves) உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துவிட்டன.
இவற்றை கட்டாயம் அணிந்தால், நோய் தொற்றில் இருந்து தப்பித்துத்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
சானிடைஸர் மிதியடி (Sanitizer Mat)
இந்தநிலையில், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தவதற்காக சானிடைஸர் மிதியடிகளை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது கேரள மாநில சணல் வாரியம்.
இந்த மிதியடியில் கால் வைத்து மிதிக்கும்போது, அதில் உள்ள சானிடைஸர் வெளியேறி, கால்களைக் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.
இதன்மூலம் அந்த இடத்தில் நோய் தொற்று பரவுவதும் தடுக்கப்படுகிறது. இவை கோவிட் தடுப்பு சுகாதார மிதியடி என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை கேரள நிதி மற்றும் சணல்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, கேரள சணல் வாரிய மேலாண்மை இயக்குநர், பத்மக்குமார், மூக்கின் வாயிலாக வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதைப்போல், கால்கள் மூலம் தொற்று பரவாமல் தடுக்கும் மிதியடி மிகச்சிறந்த முயற்சி எனப் பாராட்டினார்.
மிதியடிகளுடன் வழங்கப்படும் சானிடைஸர், தேசிய சணல் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (National Coir Research & Management Institute) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் (Sree Chitra Thirunal Institute for Medical Science & Technology) உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த மிதியடியை வீடுகளில் பயன்படுத்துவதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் கால்கள் மூலம் வீடு மற்றும் அலுவலங்களுக்குள் வருவது முற்றிலும் தடுக்கப்படுவதாக கேரள சணல் வாரியம் தெரிவித்துள்ளது.
சானிடைஸர் கிட்(Sanitizer Kit)
இந்த மிதியடி விற்பனை செய்யப்படும்போது, சணல் மிதியடி, அதனை சானிடைஸரில் போட உதவும் ட்ரே (Tray) சானிடைஸர் ஆகியவையும் சேர்த்து சானிடைஸர் கிட்டாக (Sanitizer Kit) வழங்கப்படுகிறது.
இந்த மிதியடிகளை வீட்டு வாசல்களிலும், அலுவலக வாசல்களிலும் எளிதாகப் பயன்படுத்தலாம். அலுவலகங்களில் நிறைய பேர் பயன்படுத்தும் பட்சத்தில், மிதியடியில் உள்ள சானிடைஸர் குறையத் தொடங்கும். இதற்காக அடிக்கடி சானிடைஸரில் முக்கி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வீடுகளில் குறைந்த அளவிலான நபர்களேப் பயன்படுத்துவர் என்பதால், இவ்வகை மிதியடிகள் அதிக பலனைத் தரும்.
சணல் வாரியம் மூலம் விற்பனை
பலவித வேலைப்பாடுகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சானிடைஸர் மிதியடியின் விலை 200 ரூபாய். இவை அம்மாநில சணல் வாரியம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக கேரளா முழுவதும் உள்ள பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் அதனை சார்ந்த அலுவலுகங்களுக்கு சானிடைஸர் மிதியடிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் சோதனை முயற்சியாக ஆழப்புலா நகராட்சியில் உ ள்ள 50 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அம்சங்கள் நிறைந்த இது போன்ற சானிடைஸர் மிதியடிகளை தமிழக சணல் உற்பத்தியாளர்களும் தயாரித்து விற்பனை செய்தால், கொரோனா நேரத்தில் நல்ல லாபம் ஈட்டமுடியும்.
மேலும் படிக்க...
PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 4.58 கோடி பெண்கள் மாயம் – ஐ.நா. தகவல்!
Share your comments