மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவது மனிதர்களின் அறிவாற்றல் திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மதிய நேரத்தில் துாங்குவது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதே நேரம் மதியத்தில் குட்டி துாக்கம் போடுவது மனித ஆற்றலை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
புதிர் போட்டி
பீஹாரின் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு, 18 - 24 வயது வரையிலான 68 பேரிடம் ஆய்வு நடத்தியது. அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, 'சுடோகு' (Sudoku) என்ற கணித புதிர் போட்டி அளிக்கப்பட்டது. அதில் கடுமையான கட்டத்தை அவர்கள் எட்டும் போது, ஒரு குழுவினரை ஒரு மணி நேரம் துாங்க அனுமதிக்கப்பட்டது.
மற்றொரு குழுவை துாங்காமல் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின், நிறுத்திய இடத்தில் இருந்து இரண்டு குழுக்களையும் புதிர் போட்டியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதில், குட்டி துாக்கம் போட்ட குழுவை சேர்ந்த பலர், புதிர் போட்டியை சரியாக முடித்தனர். அதே நேரம் துாங்காமல் ஓய்வெடுத்த குழுவில் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலர் திணறினர்.
இது குறித்து பாட்னா எய்ம்ஸ்(AIMS) மருத்துவமனையின் உடலியல் துறை கூடுதல் பேராசிரியர் கமலேஷ் ஜா கூறியதாவது: இந்த ஆய்வு துவக்கக்கட்டத்தில் உள்ளது. அதன் இடைக்கால முடிவுகளை தான் தற்போது வெளியிட்டுள்ளோம். இதில் மேலும் பல தன்னார்வலர்களை ஈடுபடுத்தி ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைக்க உள்ளோம்.
பலமடங்கு
மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. அவர்களின் கணித திறன் உட்பட, உடலியல் திறன் பலமடங்கு மேம்படுகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையே, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரவு, 10:00 - 11:00 மணிக்குள் துாங்குவோருக்கு இருதயம் தொடர்பான பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
நீண்ட ஆயுளைப் பெற இதை சாப்பிடுங்கள்!
அடிக்கடி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?
Share your comments