கொரோனா தொற்றின் 3-வது அலை எப்போது உச்சம் அடையும் என்பது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது. நாட்டில் ஒமைக்ரான் வைரசால், கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
குறிப்பாகத் தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நடவடிக்கை (Government action)
எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபாரத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி, அரசும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.
இதனிடையே இந்தத் தொற்று எப்போது உச்சம் அடையும் என்பது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது.
பகுப்பாய்வு
சென்னை ஐ.ஐ.டி. கணிதவியல் துறையும், கம்ப்யூட்டடேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலம், கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்துள்ளன.
ஆய்வின் முடிவுகள்
கொரோனாவை பரவல் குறைந்திருக்கிறது.
தற்போது ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படுகிற கொரோனா பரவல் விகிதமானது, 1.57 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி 14 மற்றும் ஜனவரி 21 இடையேயான நிலவரம் ஆகும். இதுவே கடந்த 7-ந் தேதிக்கும் 13-ந்தேதிக்கும் இடையே 2.2 ஆக இருந்தது.
அதற்கு முன்பாக டிசம்பர் 25-ந் தேதிக்கும் 31-ந் தேதிக்கும் இடையே இது 2.9 சதவீதமாக இருந்தது.
பரவல் குறைவு (Decreased spread)
ஆக, ஒரு கொரோனா நோயாளி 2.9 பேருக்குத் தொற்றைப் பரப்புகிற நிலை, தற்போது 1.57 பேருக்கு பரப்புகிற நிலையாகக் குறைந்துள்ளது.
மும்பையில் இது 0.67 ஆகவும், டெல்லியில் 0.98ஆகவும் இருக்கிறது. ஆனால் சென்னையில் இது 1.2 ஆக உள்ளது. இதுவே கொல்கத்தாவில் 0.56 ஆக இருக்கிறது.
புதிய வழிகாட்டுதல் (New guidance )
சென்னை ஐ.ஐ.டி. கணிதத்துறை பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா கூறியதாவது:-
மும்பை, டெல்லி மாநகரங்களில் ஒரு கொரோனா நோயாளி மற்றவர்களுக்கு தொற்றைப் பரப்புகிற ஆர் வேல்யூ அங்கு கொரோனா உச்சம் அடைந்து உள்ளூர் மயமாகி வருவதையேக் காட்டுகிறது. அதே நேரத்தில் டெல்லி மற்றும் சென்னையில் இது இன்னும் 1-க்கு அருகில் உள்ளது.
இதற்கு காரணம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய வழிகாட்டுதல்கள்படி, அவர்கள் தொடர்பு தடம் அறிதலுக்கான தேவையை நீக்கி உள்ளனர். எனவே முந்தையதைப்போல குறைவான நோய்த்தொற்றுகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.
14 நாளில் உச்சம்
சென்னை ஐ.ஐ.டி. கணக்கீட்டின்படி, கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாளில் (பிப்ரவரி 6-க்குள்) உச்சம் அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒமிக்ரானால் ரத்து செய்யப்பட்டத் திருமணம் - நியூசிலாந்து பிரதமருக்கு வந்த சோதனை!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!
Share your comments