1. வாழ்வும் நலமும்

பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

KJ Staff
KJ Staff
features of mango

மாம்பழம்... முக்கனிகளில் முதல் கனி.  மாம்பழத்தின் தாயகம் இந்தியா. தெற்கு ஆசியாவில் அதிகமாக விளைந்தாலும், மொத்த மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலக மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தியாகின்றது. மாம்பழம் ஒரு கோடைக்கால பயிர் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மாம்பழத்தை, ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய ஏற்ற பருவம். நல்ல சொட்டு நீர் பாசன வசதியுள்ள செம்மண் நிலத்தில் பயிரிட்டால்  மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் நல்ல விளைச்சல் காணலாம்.

மாம்பழத்தின் ரகங்கள்

கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள்இதோ அக்னி வெயில் தகிக்கும் வேளையில் மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது. மாம்பழத்தில் பல வகை இருந்தாலும் சில குறிப்பிட்ட ரகங்கள் அலாதியான சுவை கொண்டவை. அல்ஃ‌போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை(பீதர்), சேலம் குதாதாத் ஆகிய மாம்பழங்கள்.

அல்ஃ‌போன்சா (Alphonso Mango)

இதன் பொன்மஞ்சள் நிறம் மாம்ழத்திற்கு கூடுதல் சிறப்பு அளிக்கிறது. நாவை வருடும் சுவையுடன் உள்ள இந்த பழம் மிகவும் இனிப்பாகவும் அதிக சதைப்பற்றுடன் நார் இல்லாமல் சாறு நிறைந்ததாக இருக்கும். இது, மாம்பழங்களின் ராஜா என்றும்  அழைக்கப்படுகிறது.

மல்கோவா (Malgova or Malgoa)

மாம்பழம் என்றாலே நம் நினைவிற்கு வருவது இந்த மல்கோவா மட்டுமே. தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிடைக்கும் மல்கோவா மாம்பழங்கள் தனி சிறப்பு வாய்ந்தது. தித்திப்பு சுவை கொண்ட இந்த மல்கோவா  மாம்பழங்கள் பழுக்க பழுக்க இந்த வாசனை ஊரெல்லாம் பரவும்.

இமாம்பசந்த் (Imampasanth, Himayat or Humayun Pasand)

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் விளைவிக்கப்படும் இந்த மாம்பழம் பச்சை நிறத்தில் காண்போரை கவரும்.

பீதர் (Peethar)

நடுசாலை அல்லது பீதர் மாம்பழங்கள் இளம் சிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறம் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும். இதன் காயும் கனியும் சிறியதாகவே வளரும்.

சேலம் பெங்களூரா (Salem Bangalora)

நமது சேலம் பெங்களூரா மாம்பழம் அருமையான சுவை கொண்டது. இவற்றிற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா, என பல்வேறு பெயர்களும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்ணும் மாம்பழம் இது. இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டது.

சேலம் குதாதத் (Khudhadhadh Mango)

பெரிய பெரிய மாம்பழம் என்றால் சேலம் குதாதத் மாம்பழம் தான். இவை, சீசன் இறுதியில் கிடைக்கும். குதாதத் மாம்பழம் அளவில் பெரியதாக இருப்பதனால் ஜூஸ் போடுவதற்கு மிகவும் சிறந்தது.

மாம்பழங்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல.. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு அருமையான மருத்துவ குணங்களையும்  கொண்டது. அவற்றையும் விரிவாக பார்த்துவிடலாமே..!

varieties of Mango

மாம்பழத்தில் என்ன இருக்கு?

பொதுவாக 100 கிராம் மாம்பழத்தில் நீர்ச்சத்து, 76 கிராம் நார்ச்சத்து, 0.6 கிராம் தாதுப்பொருட்கள், 0.4 கிராம் கொழுப்பு, 0.4 கிராம் புரதம், 0.5 கிராம் மாவுப் பொருள், 17 கிராம் சுண்ணாம்புச் சத்து, 13 மில்லி கிராம் இரும்புச்சத்து, 1.2 மில்லி கிராம் கரோட்டின், 72 கலோரி தையமின், 0.8 மில்லி கிராம் நியாசின், 0.8 மில்லி கிராம் ரிபோஃபிளேவின், 0.08 மில்லி கிராம் விட்டமின் சி ஆகியவை இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மனச்சோர்வை நீக்கும் மாம்பழம்

மாம்பழத்தின் சுவை மனச்சோர்வை நீக்கும், ஆண்மையை அதிகரிக்கும் மற்றும் உடல் வன்மை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், புற்று நோய் மற்றும் வயது மூப்பு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. ரத்தம் நமது உடலில் புதிதாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால் தான், உடல் வளர்ச்சியடையும், ஆரோக்கியமாகவும் விளங்க முடியும். அத்தகைய ரத்த உற்பத்திக்கு மாம்பழங்கள் பெரிதும் உதவுகின்றன.

அஜீரனப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மாம்பழம்

மாம்பழம் வாயுத் தொல்லையை நீக்கி, உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது. பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது. இதனால், சிறுகுடல், பெருங்குடல் எரிச்சல், வீக்கம் ஏற்படுவது குறையும்.

Health & Safety Fruit

கண் குறைபாட்டை தீர்க்கும் வரப்பிரசாதம்

நாள்பட்ட தலைவலியினாலும், அதன் காரணமாக உண்டான பார்வைக்கோளாறினாலும் அவதிப்படுகிறவர்களுக்கு, மாம்பழம் ஒரு வரப்பிரசாதம். இவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மாம்பழச்சாறு பருகி வந்தால் பார்வைக்கோளாறு குணமாகும். மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.

கூந்தல் வளர்ச்சி மற்றும் முகப் பொழிவுக்கு உதவும் மாம்பழம்

மாம்பழ கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சிக்கு  முக்கிய பங்காற்றுகிறது. முடி உதிர்வு மற்றும் வழுக்கை ஏற்பட்டவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ சதையுடன் வேப்பம்பூவை சேர்த்து அதனை விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நீங்கி நன்றாக முடி வளர ஆரம்பிக்கும். 

தினமும் குளிப்பதற்கு முன்பு, ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசிவந்தால், மாசு மருக்கள், பருக்கள் மறைந்து, உங்கள் முகம் பொழிவு பெரும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாம்பழம்

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு என்பது அறவே கூடாது. மாம்பழமும் தித்திக்கும் இனிப்பு சுவை கொண்டதால்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தினை தவிர்ப்பது வழக்கம், ஆனால் மருத்துவர்கள்  இதை முற்றிலும் மறுத்து வருகின்றனர். மாம்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை அளவை உயர்த்தல் குறியீடு குறைவாகவே உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.  மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

மேற்கண்ட மருத்துவ காரணங்களோடு சாப்பிட்டாலும் சரி... பழத்தை பார்த்தவுடன் சாப்பிட்டாலும் சரி... பலன் என்னவோ சாப்பிட்டவர்களுக்கு மட்டும் தான். மாம்பழம் எல்லா நேரமும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால், கிடைக்கும்போது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அது கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்காத மாம்பழங்கள் தானா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

சரி வாங்க.... போலாம்... மாம்பழம் வாங்க...  கோடை சீசன் முடியும் முன்பே சுவைத்து விடலாம்.

Daisy Rose Mary

Krishi Jagran

https://tamil.krishijagran.com/horticulture/mango-cultivation-organic-way-of-cultivating-method/

https://tamil.krishijagran.com/news/alphonso-mango-geographical-indication/

https://tamil.krishijagran.com/farm-info/do-you-know-how-to-treat-bugs-and-fruit-fly-on-a-mango-tree-listen-experts-advice/

English Summary: Let’s Enjoy This Summer With Our Seasonal Fruit of Mango: Know The Varieties and The Nutrients Facts Published on: 23 May 2020, 01:20 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.