1. வாழ்வும் நலமும்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தாட்பூட் பழத்தை சாப்பிடலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Tadpote fruit - Control BP

ஊட்டி, தொட்டபெட்டா மலைப்பகுதிகளில் ஒட்டிய காட்டு மரங்களில் கொடிகள் போல் பரவி, அதில் பழம் காய்த்து தொங்குவதை காணலாம். இதனை அந்தப் பகுதியினர் வால்குரட்டை பழம் என அழைக்கின்றனர். உண்மையில் இதன் பெயர் தாட்பூட் பழம்! இந்த பழத்தின் தாயகம் பிரேசில் (Brazil). இந்தியாவிலும் இந்த பழம் பயிரிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் பேஷன் பழம் எனவும் அழைக்கின்றனர். காரணம் இந்த பழத்தை பார்க்கும் போதே அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றுவதால் இந்த பெயராம்.

முதலில் பிரேசிலில் உள்ள மலைகளில் வளர்ந்த இந்தப்பழம் அந்தப்பகுதியில் நடமாடிய குரங்குகளின் விரும்பிய பழமாக இருந்தது. பிறகு அதனைப் பார்த்துத்தான் மனிதர்களும் இந்த பழத்தை சாப்பிட ஆரம்பித்தனர். மஞ்சள், ஊதா உட்பட பல வண்ணங்களில் இடம், சூழலுக்கேற்ப இந்த பழம் காய்ச்சு பழுக்கின்றன. இந்த பழம் கொரோனா (Corona) காலத்தில் சிறந்த பழமாக கருதப்படுகிறது. காரணம் இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

மருத்துவ குணங்கள்

  • இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் B-6, B-7 சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • இந்த பழத்தை பழமாக மட்டுமில்லாமல் ஜூஸாகவும் (Juice) சாப்பிடலாம்.
  • தைராய்டு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
  • இதில் உள்ள மெக்னீசியம், கவலை மற்றும் மனஅழுத்தத்தை விரட்டும் தன்மை கொண்டதாம்.
  • இந்த பழத்தை கொய்யா, மாம்பழம், பப்பாளி மற்றும் தர்பூசணி உட்பட பல தண்ணீர் நிறைந்த பழங்களுடன் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
  • பேஷன் பழத்தில் ஜாம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • மேலை நாடுகளில் ஐஸ்கிரீம் மற்றும் மதுபானங்களிலும் இதனை இணைத்து சாப்பிடுகின்றனர்.
  • கேக்குகள், மாவினால் செய்யப்படும் பண்டம், பழம் அல்லது மாமிசம் கொண்டு வேக வைத்த உணவு, பழம் கொண்டு தயாரிக்கப்படும் பணியாரம், சுவையூட்டிகள், தக்காளி சாஸ், குழம்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க

தினமும் சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நுரையீரல் நலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

English Summary: Let's eat tadpote fruit to control blood pressure! Published on: 07 October 2021, 08:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.