உணவுகளின் சாம்ராஜ்யமான மதுரையில் சுவைமிக்க பல சைவ அசைவ உணவுகள் இருப்பினும் மதுரையில் ரோட்டு கடைகள் மற்றும் பல ஹோட்டல்களில் கிடைக்கும் மதுரை தண்ணி சட்னிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதை எளிய முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பின்வருமாறு காண்போம்.
தேவையான பொருட்கள்:
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
- புதினா இலை - 10 இலை
- பச்சை மிளகாய் - 3
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - ½ கப்
- பொட்டுக்கடலை - ¼ கப்
- தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை - ¼ கப்
- உப்பு - தேவையான அளவு
- புளி - ஒரு சிறிய அளவு
தாளிக்க:
- கடுகு - ½ டீஸ்பூன்
- உளுந்து - ¼ டீஸ்பூன்
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- வரமிளகாய் -1
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கியதும் அடுப்பை அனைத்துவிடவும்.
இந்தக் கலவையை நன்றாக ஆற வைக்கவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை, உப்பு, புளி மற்றும் வதக்கிய கலவையை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் நன்கு கலக்கவும்.
அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும். பின்னர் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை வரமிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இதை சட்னி கலவையில் கொட்டி நன்கு கலக்கவும்.
இப்போது சுவையான மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி ரெடி. இதை தோசை இட்லியுடன் பரிமாறினால் குழந்தைகளும் பெரியோர்களும் எண்ணிக்கையில்லாமல் சாப்பிடுவார்கள்.
மேலும் படிக்க
கொரியன் Hair Care டிப்ஸ், இனி செலவில்லாமல் வீட்டியிலேயே தலைமுடியை பராமரிக்கவும்!
cough syrup: குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் சிரப்- WHO எச்சரிக்கை
Share your comments