உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவது நல்லது தான் என்றாலும், அதனை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் பல பலன்கள் கிடைக்கும். நம் உடலின் சக்தியை பெருக்குவதற்கு உலர் திராட்சை பெரிதும் உதவுகிறது.
உலர் திராட்சையின் பயன்கள் (Benefits of Dried Grapes)
- கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
- அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்றால், உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.
- உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- உலர் திராட்சை தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பொருளாக உள்ளது. எனவே இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.
- திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
- உலர் திராட்சை தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- உலர் திராட்சை தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் . திராட்சைப்பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
- திராட்சையில் உள்ள பொட்டாசியம் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
- உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, ரத்த சோகையையும் தடுக்கிறது.
மேலும் படிக்க
செரிமானப் பாதை சீராக தினமும் இந்தப் பழத்தை சாப்பிடுங்க.!
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா!
Share your comments