1. வாழ்வும் நலமும்

முடி சார்ந்த பிரச்சனைக்கு மயோனிஸ் அற்புத தீர்வு!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Mayonnaise is a wonderful solution to hair problem!

உணவுப் பொருட்களில் மயோனீஸ் சேர்க்கப்படுகிறது. மயோனீஸ் பொதுவாக பாஸ்தா அல்லது சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதன் ருசியை மிகவும் விரும்புகிறார்கள். மயோனீசை வெளிநாடுகளில் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மயோனீசை உங்களது கூந்தலில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுவோம். முடிகளில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்க மயோனீஸை பயன்படுத்தலாம். மயோனீஸ் புரதச்சத்து நிறைந்த முட்டையைக் கொண்டுள்ளது. இதனுடன், காய்கறி எண்ணெய் மற்றும் வினிகரும் இதில் உள்ளன. இது முடிக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மயோனீஸ் வைத்து ஹேர் மாஸ்க் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

மயோனீஸ்

மயோனீசை பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் முடியை நனைத்து கொள்ள வேண்டும். மேலும் முடியை 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பிறகு கூந்தலை சீவி தலையில் ஷவர் தொப்பியை அணிந்து 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு முடிக்கு ஷாம்பு போடவும்.

மயோனீசை தலைமுடியில் பூசுவதன் நன்மைகள்

பொடுகு பிரச்சனையை நீங்கும்

 பொடுகு பிரச்சனையை நீக்க நீங்கள் மயோனீசை பயன்படுத்தலாம். இது உச்சந்தலையில் இருக்கும் பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது மற்றும் பொடுகு பிரச்சனையை குறைக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

மயோனீஸ் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது உங்கள் முடி வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, ஒரு பெரிய அளவு புரதமும் இதில் உள்ளது, இது முடி வேர்களை வலுப்படுத்தவும்அடர்த்தியாகவும் உதவுகிறது.

முடியை மென்மையாக்குகிறது

மயோனீஸ், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது, இது முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது. இது முடியை ஆரோக்கியமாக வைத்து வேகமாக வளர உதவுகிறது. இது ஒரு கண்டிஷனர் போல செயல்படுகிறது.

முடியை நீரேற்றமாக வைத்திருக்கும்

மயோனீசில் முட்டை, வினிகர், எண்ணெய் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் முடியை ஈரப்பதமாக்க உதவுகின்றன. இது உச்சந்தலை முடிக்கு ஊட்டமளித்து முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மேலும் படிக்க...

முடி, தோல் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஓமத்திலிருந்து கிடைக்கும் சூப்பர் நன்மைகள்

English Summary: Mayonnaise is a wonderful solution to hair problem! Published on: 20 September 2021, 04:04 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.