பேரிச்சம்பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும்,சத்துக்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னிசியும், இரும்பு சத்து, நார் சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன.
பேரிச்சம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:
-
பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை, அறிவாற்றல், அதிகரிக்கும். முதியவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மந்தமானது குறைந்து புத்தி சுறுசுறுப்பாகும்.
-
இதில் உள்ள பொட்டாசியம் கேட்ட கொழுப்புக்கள் ஏற்படுவதை தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்யை தடுக்கிறது. இதனால் ஸ்ட்ரோக் மாற்று மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் குறைகிறது.
-
இரத்த சோகை , பேரிச்சம்பழத்தில் இரும்பு மற்றும், காப்பெற் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை தடுக்கிறது.
-
இதில் உள்ள சர்க்கரை, புரதம், வைட்டமின், ஆகியவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. உடல் மெலிதாக இருப்பவர்கள் பேரிச்சம் பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
-
பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து உங்கல் செரிமானத்தை ஆரோக்கியமாக்குகிறது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் ஆகியவை சீராகிறது.
-
பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலு பெரும்.
Share your comments