மருத்துவத்தில் மூங்கிலுக்கு (Bamboo) குறிப்பிடத்தக்க இடம் உண்டு. ஆசியாவில், அதிலும் குறிப்பாக சீனாவிலும், ஜப்பானிலும் மூங்கில் அதிகம் காணப்படுகிறது. சீன மூங்கிலை வாழ்க்கையுடன் ஒப்பிட முடியும். முதல் 5 மாதத்தில் மந்தமாக வளரும் மூங்கில் 6ஆவது மாதத்தில் 90அடியாக உயர்ந்துவிடும்.
மருத்துவ பயன்கள்
மூங்கில் தாவரத்திபயன்ல் இருந்து கிடைக்கும் தண்டு, மூங்கில் முளை என்றும் அழைக்கப்படுகிறது. ஆசியாவில் சமையலில் சேர்க்கப்படும் மூங்கில் தண்டுகள் சுவையானவை, கொழுப்புச் சத்து இல்லாதவை.
பாம்பு கடிக்கு அருமருந்தாக பயன்படுகிறது மூங்கில். மலைவாழ் மக்கள் பாம்பு கடிக்கு மூங்கில் இலைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்பு கொண்ட மூங்கிலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல் மற்றும் பொட்டாசியம் இதயத்துக்கு (Heart) நன்மை பயக்கும்.
மூங்கில் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு நுரையீரல் சம்பந்தமான ஆஸ்துமா, இருமல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது.
வாய்ப்புண், வறட்டு இருமல், வயிற்றுப்போக்கு, மூலம் என பல சிக்கல்களை போக்குவதற்கு மூங்கிலில் உள்ள நார்ச்சத்து உதவினால், மூங்கிலின் இலைகள் வயிற்று உபாதைகளை சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
மூங்கிலில் உள்ள நுண்ணுயிர் கொல்லி, அலெர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டிபயாடிக் ஆகியவை செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. நமது உடலில் இருக்கும் கூடுதலான நீரை உறிஞ்ச உதவும் மூங்கிலால், உடலில் ஏற்படும் வீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மூங்கில் தண்டை எப்படி உபயோகிப்பது என்பதை தெரிந்துக் கொள்வோம். மூங்கில் தண்டை சிறுசிறு குச்சிகளாகவும், துண்டுகளாகவும் வெட்டி கொண்டு, உப்பு சேர்த்த தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு சமைத்தால், அது மென்மையாகிவிடும். அதன் பிறகு வழக்கமான காயைப் போலவே மூங்கில் தண்டை பயன்படுத்தலாம்.
காய்கறிகளைப் போலவே மூங்கிலையும் சேமித்து வைக்கலாம். உரிக்காத மூங்கில் தண்டை 2 வாரம் வரைக்கும் ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால் உரித்த மூங்கில் தண்டை 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே ஃபிரிட்ஜில் வைக்க முடியும்.
நாட்டு மருந்து கடைகளில் மூங்கில் எளிதாக கிடைக்கும். இன்று ஆன்லைனிலும் மூங்கில் தண்டு கிடைக்கிறது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தாய்ப்பால் தரும் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், மருத்துவரின் ஆலோசனையில் தான் மூங்கில் தண்டுகளை சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க
கசப்பு தான் ஆரோக்கியம்: கசப்பான உணவுகளின் நன்மைகள்!
புரதச் சத்து குறித்த புரிதல் அவசியம் தேவை!
Share your comments